சைவ இலக்கிய வரலாறு

சைவ இலக்கிய வரலாறு, ஔவை சு. துரைசாமி பிள்ளை, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 392, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-809-6.html சைவத் தமிழ்ப் பேரறிஞர் ஔவை துரைசாமிப் பிள்ளை. கி.பி. 700 முதல் கி.பி. 1000 வரையில், 300 ஆண்டுகளில் உருவான பக்திநூல்களின் வரலாற்றை, பக்தி மனத்துடனும், ஆய்வு நலத்துடனும் இந்நூலில் மிக அற்புதமாகத் தந்துள்ளார். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா முதலிய 12 சைவத் திருமுறைகள் தோன்றிய காலத்தை சந்தேகத்துக்கு இடமின்றி இவர் உறுதி […]

Read more

நம்மிடையே உலவும் ஆவிகள்

நம்மிடையே உலவும் ஆவிகள், மேகதூதன் பதிப்பகம், 7/13, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 250ரூ. ஆவிகளுடன் பேசும் நுட்பங்கள், தியான முறைகள், நம் வாழ்வில் ஆவிகள் எப்போதும் நுழையும் என்பது போன்ற தகவல்களைத் தருகிறது இப்புத்தகம். ஆவி மீடியாவான ஜேம்ஸ், வான் பிராக், நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, மக்களின் கேள்விகளுக்கு ஆவிகளிடம் நேரடியாகக் கேட்டு, பதில் பெற்றுத் தந்தது. உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் அதுவே முதல் முறை. ஆவிகள் குறித்து மக்களிடம் ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. ஆவிகள் உலகம் […]

Read more

தமிழைப் பழித்தவருக்கு சாட்டையடி

தமிழைப் பழித்தவருக்கு சாட்டையடி, தமிழ்ப் பேராயம், திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் 603203, காஞ்சிபுரம் மாவட்டம், விலை 120ரூ தொல்லியல் ஆராய்ச்சியாளரான இரா. நாகசாமி ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். தமிழையும் சமஸ்கிருதத்தையும் காட்டும் கண்ணாடி (The Mirror of Tamil and Sanskrit) என்பது அந்த நூலின் பெயர். தமிழ் தனித்தன்மையுடன் வளரவில்லை என்றும், சமஸ்கிருத சொற்களைக் கடன் வாங்கியே வளர்ந்தது என்றும் இந்த நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவில் வடமொழியை உயர்த்தியும், தமிழைத் தாழ்த்தியும் இந்த நூலில் எழுதப்பட்டுள்ளது. இதற்கு […]

Read more

இராமனும் இராமசாமியும்

இராமனும் இராமசாமியும், ம. பிரகாஷ், காவ்யா, பக். 192, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-313-6.html ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போன்று, எந்த விவாதத்திற்கும் இரண்டு விதமான விளக்கங்கள் உண்டு என்பர். இந்நூலில் ராமரின் அவதாரம் குறித்து, ஈ.வெ.ரா., எடுத்துக்கொண்ட ராமாயண எதிர்ப்புப் போர் குறித்து, மிக விரிவாக ஆய்வு செய்யப்படுவதை காண்கிறோம். இந்நூலில் மூன்று பிரிவுகளில் ராமாயணம் குறித்த ஆய்வுகள் நூலாசிரியர் செய்துள்ளார். அதில் பெரியாருக்கு முன் ராமாயணமும் தமிழ் சமூகமும் என்ற […]

Read more

வளம் தரும் வான்மீகியின் பாலகாண்டம், உரையும் ஆக்கமும்

வளம் தரும் வான்மீகியின் பாலகாண்டம், உரையும் ஆக்கமும், புலவர் ஆ. காளத்தி, கிள்ளை நிலையம், 16/383, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை 600024, பக். 294, விலை 190ரூ. வான்மீகி இயற்றியுள்ள ராமாயணத்தின் பாலகாண்ட தமிழ் மொழிபெயர்ப்பான இந்த நூல் எளிமையான தமிழில் எல்லோருக்கும் புரியும்படியாக வெளிவந்துள்ளது. பால காண்டத்தில் உள்ள எழுபத்து ஏழு சருக்கங்களில் சில சுலோகங்களை அழகிய முறையில் காளத்தி மொழி பெயர்த்துள்ளார். மூல நூலுக்கு ஊறு செய்யாது மொழி பெயர்த்திருப்பது பாராட்டுக்குரியது. இதைப் பாராட்டும் ஸ்ரீ வரத யதிராஜ ஜீயர் […]

Read more

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம், இராம. கோபாலன், விஜயபாரதம் பதிப்பகம், சென்னை 31, பக். 296, விலை 200ரூ. சுதந்திரம் என்பது போராடுவதற்கான உரிமையையும் உள்ளடக்கியது. நமது நாட்டின் சுதந்திரத்துக்கும் மக்களாட்சி மாண்புக்கும் 1975 ஜுன் 25இல் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அந்த நெருக்கடியிலிருந்து மீண்டது எப்படி? நமது உரிமைகளை சத்தமின்றி மீட்டவர்கள் யார்? அதில் அவர்கள் அடைந்த கஷ்டங்கள் எவை? என்பதை இந்நூல் விளக்குகிறது. தனது அரசியல் எதிரிகள் பலம் பெற்று வருவதைத் தடுக்கவும், நீதிமன்றங்களின் கண்டனங்களிலிருந்து தப்பவும் அன்றைய பிரதமர் இந்திரா […]

Read more

சுரதா

சுரதா, ஆர். குமாரவேலன், சாகித்ய அகடமி, பக். 128, விலை 50ரூ. உவமைக் கவிஞர் என்று பலராலும் புகழப் பெற்றவர். 85 ஆண்டு காலம் (1921-2006) உடையில் தூய்மை, உள்ளத்தில் தூய்மை, நட்பில் தூய்மை என்று எங்கும் எப்போதும் தூய்மையாகவே வாழ்ந்து காட்டியவர். அவரது வாழ்க்கை வரலாற்றை மிக அருமையாக, எளிமையாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். -சிவா.   —-   Guru Vijayeendra The Invinvible Saint(part 1). தமிழ்மூலம்-அம்மன் சத்தியநாதன், ஆங்கிலத்தில்-கே. லஷ்மண், அருள்மிகு அம்மன் பதிப்பகம், பக். 320, விலை 290ரூ. […]

Read more

துக்காராம்

துக்காராம், பால சந்திரா நெமதே, தமிழாக்கம்-ஆர்.கே. நாகு, சாகித்ய அகடமி, குணா பில்டிங்ஸ், தேனாம்பேட்டை, சென்னை 600018, பக். 136, விலை 50ரூ. மகாராஷ்டிரா மாநிலத்தில், பக்தி நெறியை பரப்பியவர்களில் மிக முக்கியமானவர் துக்காராம். 13ம் நூற்றாண்டில் தோன்றிய வரகரி இயக்கத்தின் மிக முக்கியமான அங்கமாக திகழ்ந்தவர். ஜாதிப் பாகுபாடுகளை ஏற்காமல், எல்லாரும் சமம் என்ற கோட்பாட்டை கொண்டது இந்த இயக்கம். அப்போது மித மிஞ்சிய ஆணவப் போக்கோடு இருந்த பிராமணீயத்தை சரிக்கட்டும் மாற்றுச் சக்தியாய் இயங்கிய வரகரி இயக்கத்தை லட்சக்கணக்கான மக்களிடையே பரப்பியவர் […]

Read more

தமிழர் சமுதாய சிந்தனைகள்

தமிழர் சமுதாய சிந்தனைகள், க.ப. அறவாணன், தமிழ்க் கோட்டம், பக். 128, விலை 100ரூ. பதினாறு தலைப்புகளில் சமுதாயச் சிந்தனைகளை அறவுரையாக, தமிழர் சமுதாயச் சிந்தனைகள் என்ற தலைப்பில் வழங்கியிருக்கிறார் க.ப. அறவாணன். அவ்வப்போது, பல ஏடுகளிலும் (தினமலர் உட்பட) இதழ்களிலும் ஆசிரியர் எழுதிய சமுதாயக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். திருமண வயதைக் குறைத்தால் என்ன? உலகத் தமிழர் கவனத்திற்கு, ஆகிய கட்டுரைகளில், நமது பாரம்பரியத்தை எடுத்துக்காட்டிய அதே சமயம், நடைமுறை சிக்கல்களையும் சொல்லியிருந்தது நல்ல அலசல். ஒவ்வொரு கட்டுரையும் சிந்தனையைத் தூண்டும், விதமாக […]

Read more

வைரமணிக்கதைகள்

வைரமணிக்கதைகள், தாரிணி பதிப்பகம், பிளாட் எண். 4ஏ, ரம்பா பிளாட்ஸ், 32/79, காந்திநகர் 4வது பிரதான சாலை, அடையார், சென்னை 20, விலை 450ரூ. ‘எழுத்தாளர் வைரவனின் 80 சிறந்த சிறுகதைகளை தேர்வுசெய்து ஒரே பெரிய புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள். வைரமணிக்கதைகள் என்று குறிப்பிட்டிருப்பது பொருத்தமானதே என்பதை பல கதைகள் நிரூபிக்கின்றன. நன்றி: தினத்தந்தி 16/10/2013.   —-   சிறுவருக்கு மகாபாரதம், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, விலை 150ரூ. சிறுவருக்கு மகாபாரதம் என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ள இந்த […]

Read more
1 212 213 214 215 216 240