ஐரோம் ஷர்மிளா

ஐரோம் ஷர்மிளா, க. சிவஞானம், நக்கீரன் வெளியீடு, சென்னை 14, பக். 120, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-082-6.html என் உடலே என் ஆயுதம் என்று 12 ஆண்டுகளாக இந்திய அரசுக்கு எதிராகப் போராடி வரும் ஐரோம் ஷர்மிளாவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். மணிப்பூரில் அமல்படுத்தப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதே ஷர்மிளாவின் கோரிக்கை. தீவிரவாதக் குழுக்களை ஒடுக்குவதாகக் கூறி, சாதாரண மக்களை நசுக்கவே இந்தச் சட்டம் பயன்படுகிறது என்பது […]

Read more

பாரதி குழந்தை இலக்கியம்

பாரதி குழந்தை இலக்கியம், சுகுமாரன், உலகத் தமிழர் பதிப்பகம், 4, சவுராஸ்டிரா நகர், சூளைமேடு, சென்னை 94, விலை 70ரூ. பாப்பா பாட்டை தவிர குழந்தை இலக்கியத்திற்கென்று எதையும் பாரதியார் எழுதவில்லை என்று சிலர் எண்ணுகிறார்கள். அதனை பொய்பிக்கும் வகையில் மகாகவி பாரதியார் எழுதிய பாடல்கள், கதைகளில் இருந்து குழந்தை இலக்கியம் என்னும் தலைப்பில் ஒரு நூலை தொகுத்து வழங்கி உள்ளார் ஆசிரியர் சுகுமாரன். இந்த நூலில் பாரதியாரின் கவிதைகள், கதைகள் இடம் பெற்று உள்ளன. நன்றி: தினத்தந்தி, 26/9/2012.   —-   […]

Read more

வாடிய மலர்

வாடிய மலர், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, (பிராட்வே) சென்னை 108, விலை 260ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-864-2.html 1947 ஆகஸ்டு 15ந் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு சுதந்திர நாடுகளாக உருவாயின. பிரிவினைக்கு முன்பும் பின்பும் மதக்கலவரங்கள் மூண்டு, இரு தரப்பிலும் சுமார் 20 லட்சம்பேர் பலியானார்கள். இந்தக் காலக்கட்டத்தில் ஒரு சீக்கிய வாலிபருக்கும், இஸ்லாமிய பெண்ணுக்கும் ஏற்பட்ட காதலையும், அவர்கள் காதல் நிறைவேற ஒரு இந்து இளைஞன் நடத்திய புரட்சியையும் மையமாக வைத்து எழுதப்பட்ட […]

Read more

குறிஞ்சி மலர்

குறிஞ்சி மலர், தீபம் நா. பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, தி.நகர், சென்னை 17, பக். 480, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-7.html எழுத்தாளர் நா. பார்த்தசாரதியின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்று குறிஞ்சிமலர். அரவிந்தன், பூரணி என்ற இரண்டு கதாபாத்திரங்களும் இந்த நாவலின் மூலம் பிரபலமானார்கள். இந்தக் கதாபாத்திரங்களின் பெயர்களேகூட பின்னாளில் குழந்தைகள் பலருக்கு சூட்டப்பட்டதும் உண்டு. சமூகம், அரசியல் இரண்டு களங்களும் சிறப்பாக வெளித்தெரியும் இந்நாவலில்,தேர்தல் காலத்தில் நிகழும் வன்முறை காட்டுமிராண்டிச் சம்பவம் […]

Read more

திருத்தொண்டர்கள்

திருத்தொண்டர்கள் (63 நாயன்மார் வரலாறு), வீ. தமிழ்ச் சேரனார், தஞ்சை பெரிய கோயில் வார வழிபாட்டு மன்றம், தஞ்சாவூர், பக். 256, விலை 120ரூ. சைவ சமயத்தின் ஒப்பற்ற கருவூலமாக விளங்கும் பன்னிரு திருமுறை வரிசையில் பன்னிரண்டாவது திருமுறையாக வைத்துப் போற்றப்படுவது பெரியபுராணம். தெய்வச் சேக்கிழார் அருளிய அப்பெரியபுராணத்தை அடிப்படையாகக் கொண்டு, 63 மூன்று நாயன்மார்களின் அருள் வரலாற்றை விரித்துரைக்கிறது இந்நூல். நாயன்மார்கள் பிறந்த ஊர், குலம் அவர்களுடைய சிவ பக்தியின் ஆழம், இறைவன் அவர்களைத் தடுத்தாட்கொண்டவிதம் எல்லாமே சுவைபட எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக மானக்கஞ்சாற […]

Read more

மருத நிலமும் பட்டாம் பூச்சிகளும்

மருத நிலமும் பட்டாம் பூச்சிகளும், சோலை சுந்தரபெருமாள், முற்றம், சென்னை 14, பக். 296, விலை 150ரூ. நூலாசிரியரின் கருத்தரங்க உரைகள், இதழ்களில் வெளிவந்த அவருடைய கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்பு இந்நூல். வண்டல் நிலப் பகுதியின் குறிப்பாக தஞ்சை மாவட்ட மக்களின் வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகள். தஞ்சை மண்ணின் சாதியப் பண்பாடு, உணவு, பழக்க வழக்கங்கள், வழிபாடு ஆகிய எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அம்மண்ணில் வளம்பெற்றிருந்த நிலவுடைமைச் சமூக அமைப்பே இருந்தது என்பதைச் சொல்லும் நூல். தஞ்சை மாவட்ட எழுத்தாளர்களின் சிறப்பான […]

Read more

தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு, முனைவர் மு. அருணாசலம், பேராசிரியர் இராஜா வரதராஜா, அருண் பதிப்பகம், திருச்சி 1, பக். 672, விலை 125ரூ. தமிழர்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுபவை தமிழ் இலக்கியங்கள். அவை காலத்தால் அழிந்துவிடாதபடி தமிழின் இலக்கிய வரலாறு முறையாகப் பதிவு செய்யப்பட்டு அதன் பயனை எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் பதிவு செய்தவர் தமிழறிஞர் கா. சுப்பிரமணியப்பிள்ளை. அவருக்குப் பின் மு. அருணாசலம், மு. வரதராசன், தி.வை. சதாசிவபண்டாரத்தார், க. வெள்ளைவாரணர் […]

Read more

இனி எல்லாம் சுகப்பிரசவமே

இனி எல்லாம் சுகப்பிரசவமே, ரேகா சுதர்சன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 88, விலை 55ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-841-4.html பெண்கள் கர்ப்பகாலத்தில் உடல் ரீதியாகவும் மனதளவிலும் தங்களை எவ்வாறு தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைக் கூறும் நூல். இன்றைய நாளில் வழக்கதைக் கூறும் நூல். இன்றைய நாளில் வழக்கொழிந்துகொண்டே வரும் சுகப்பிரசவத்தை நோக்கி பெண்களைத் திசைதிருப்ப நூலின் பெரும்பான்மையான பக்கங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சிசேரியன் என்ற சொல்லை துரத்தியடிக்கிற சாகசம், கர்ப்பம் தரிக்கும் ஒவ்வொரு பெண்ணிடமும் இயற்கையிலேயே […]

Read more

சோழர் செப்பேடுகள்

சோழர் செப்பேடுகள், நடன. காசி நாதன், சேகர் பதிப்பகம், சென்னை 78, பக். 144, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-515-8.html சோழப் பேரரசர்களான சுந்தரச் சோழனின் அன்பில் செப்பேடு அவரது மைந்தன் முதலாம் ராஜராஜனின் பெரிய லெயிடன் செப்பேடு, அவரது மகன் முதலாம் ராஜேந்திரனின் கரந்தைச் செப்பேடு, அவரது மகன்களில் ஒருவரான வீரராஜேந்திரனின் மகள் வயிற்றுப் பெயரனான முதலாம் குலோத்துங்கனின் சிறிய லெயிடன் செப்பேடு ஆகிய செப்பேடுகளின் தமிழ்ப் பகுதிகளின் மூலம் அடங்கிய நூல் இது. மேலும் […]

Read more

திமிறி எழு

திமிறி எழு, அ. ஜெயசீலி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், சென்னை 98, பக். 72, விலை 40ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-985-1.html ஒரு பெண் பிறந்தது முதல் சமுதாயத்தில் என்னென்ன பிரச்னைகளுக்கெல்லாம் ஆளாகிறாள் என்பதை எடுத்துக்காட்டுகளுடனும் புள்ளி விபரங்களுடனும் கூறியிருக்கிறார் நூலாசிரியர். குழந்தை பாலியல் வன்முறை, இளம்பருவம், தாய் என்ற தியாகத் திருவுருவம் என ஒரு பெண்ணின் அனைத்து நிலைகளிலும் நின்று அலசியுள்ளார். திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள் ஆகியவற்றில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெண்ணுக்கு […]

Read more
1 165 166 167 168 169 180