விஸ்வரூபம்

விஸ்வரூபம்,இரா. முருகன், கிழக்கு பதிப்பகம், பக். 790, விலை 400ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-538-8.html கமலும், இரா. முருகனும் ஒரே சமயத்தில் ஏகமாய் விசுவரூபத்திருக்கிறார்கள். கமல் ஹாலிவுட்டுக்காக தன் விசுவரூபத்தைக் காட்டியிருக்கிறார். இரா. முருகன் எப்போதுமான தன் விஸ்வரூபத்தை இந்தமுறை விரிவான களத்தில் அதிக பக்கங்களில் முன்வைத்திருக்கிறார். சுமார் 50 ஆண்டுகளில் (1889-1939) 50க்கும் மேற்பட்ட பாத்திரங்களின் நடமாடுதலில் நாவல் என்ற பெருங்கதை வடிவத்தில் தன்னை முன்னிருத்தியிருக்கிறார். ஐம்பதுக்கும் மேற்பட்ட பாத்திரங்களை மையம் தவிர்த்தவர்களாக காட்டும் செயலும், மாந்திரீக யதார்த்த […]

Read more

சுவடிகள் வழங்கி கவிதைகள்

சுவடிகள் வழங்கி கவிதைகள், கவிஞர் கோ. வேணுகோபாலன், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, பக். 208, விலை 125ரூ. பழந்தமிழ்க் கவிதைகளில் உள்ள வடிவங்கள், சொல்லாட்சிகள், உவமைகள், அணிகள் என்று அத்தனையையும் ஒரு சேரப் படித்து இன்புற நினைப்பவர்களுக்குப் பொருத்தமான நூல். வேறு எந்த மொழிக்கும் இத்தனை சிறப்பு உண்டா என்று கேட்கும் அளவிற்கு பழந்தமிழ்க் கவிதைகளை, இலக்கியச் செல்வங்களை ஒன்று திரட்டி, அதற்கேற்ற விளக்கமும் தந்து தமிழை உயர்த்தியிருக்கிறார் ஆசிரியர். கம்பன் பாட்டுகளில் களிக்க வைக்கிறார். வில்லிபுத்தூராரின் […]

Read more

பெண்எழுத்து

பெண்எழுத்து, இரெ. மிதிலா, அடையாளம், புத்தாநத்தம் 621310, பக். 224, விலை 150ரூ. எழுத்துலகில் பெண்கள் எப்படி நுழைந்தனர்? அவர்கள் எழுத்துலகில் நுழைந்த காலகட்டத்தின் சமூகச் சூழல் எப்படி இருந்தது? என்பன போன்ற பல்வேறு நுட்பமான தகவல்கள் நிறைந்துள்ள நூல். பெண் எழுத்தாளர்கள் குறித்த ஆய்வாக இருந்தாலும், சமூகத்தில் அவர்கள் நடத்தப்பட்டவிதம், அவர்களது முக்கியத்துவம் எனப் பல தகவல்களையும் நூல் உள்ளடக்கியிருப்பது பாராட்டுக்குரியது. எனினும் இருபதாம் நூற்றாண்டில் குறிப்பிட்ட மதத்தினர் வந்த பிறகே பெண்கள் அதிகம் எழுதத் தொடங்கினர் என்பது போன்ற சில கருத்துகள் […]

Read more

திருவள்ளுவரின் புதிய பரிமாணங்கள்

திருவள்ளுவரின் புதிய பரிமாணங்கள், முனைவர் ந. வேலுசாமி, லியோ டால்ஸ்டாய் பதிப்பகம், சென்னை 10, பக். 344, விலை 250ரூ. உலகப் பொதுமறையாம் திருக்குறளை மையப்படுத்தி எத்தனை ஆய்வுகள் வேண்டுமானாலும் செய்து கொண்டே இருக்கலாம். திருவள்ளுவரின் புதிய பரிமாணங்கள் என்ற இந்நூல் கவனிக்கத்தக்க படைப்பாகும். அன்னை, தந்தை, ஆசிரியன், குடிமகன், நண்பன், மனைவி, அமைச்சன், சான்றோன், நீதிபதி, ஆட்சியாளன் போன்றோர் வாழ்வில் தவிர்க்க முடியாதவர்கள். அவர்களைப்பற்றி திருவள்ளுவர் பல்வேறு பரிமாணங்களுடன் அணுகியிருப்பதைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர். திருவள்ளுவர் அன்னை பற்றிக் கூறிய கருத்துகள் […]

Read more

அன்புசேர் வாழ்க்கையிலே

அன்புசேர் வாழ்க்கையிலே, அமுதா கணேசன், தமிழன் நிலையம், 5, கௌடியா மடம் சாலை, இராயப்பேட்டை, சென்னை 600014, பக். 368, விலை 150ரூ. காதல் என்பது தென்றலா? புயலா? சுனாமியா? என்ற கேள்வி எழ, அதற்கு விடையாக இந்நூலைப் படைத்துள்ளார் ஆசிரியர். இந்நூலில் 3 காதல் ஜோடிகள் இடம்பெறுகின்றனர். காதலர்கள் கடற்கரை, ஹோட்டல், பேருந்துப் பயணம் என ஊர் சுற்றுவதையும், அவர்களின் எல்லை மீறல்களையும் குறிப்பிட்டுள்ள ஆசிரியரின் எழுத்துத்திறன், இப்புத்தகத்தைப் படிப்பவர்களைக் கிளுகிளுப்படையச் செய்யும். பெற்றோரின் அன்புக்கு மாறாக எதையும் செய்ய முடியாமல், 2 […]

Read more

வாழ்வில் வசந்தம்

வாழ்வில் வசந்தம், டாக்டர் என். ஸ்ரீதரன், கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, பக். 220, விலை 60ரூ. ஊக்கமளிக்கும் வாழ்வு முன்னேற்ற நூல். உழைத்தால் முன்னேறலாம். வறுமையும் வசதிக்குறையும் ஒரு தடை அல்ல. தோல்விகள் வெற்றியின் படிக்கற்கள் என்று நிறுவுகிறார் ஆசிரியர். சர் ஐசக் நியூட்டன் சாதாரணக் குடியானவர் குடும்பத்தில் பிறந்தவர். மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு கூலித் தொழிலாளியின் புதல்வர். டாக்டர். ம.பொ.சி, துவக்கப் பள்ளியில் மூன்றாவது வகுப்பைக்கூட முடிக்காதவர். முடியுமா? என்றெல்லாம் உதாரணங்கள் காட்டி, […]

Read more

சிவதரிசனம்

சிவதரிசனம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 192, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-013-7.html மொகஞ்சதாரோ காலத்திலேயே (கி.மு. 3250) சிவ வழிபாடு இருந்துள்ளது என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் கூற்ற. காலத்தால் மூத்த மிகப் பழமையான சிவ வழிபாட்டின் அருமை பெருமையை சிவலிங்கத் தத்துவம், பைரவர் தத்துவம், கணேசர் தத்துவம், முருகன் தத்துவம், நடராஜர் தத்துவம், போலோநாத் தத்துவம் ஆகிய தத்துவங்களின் அடிப்படையில் நூலாசிரியர் விளக்கியுள்ளார். இடையிடையே வடமாநிலங்களில் உள்ள […]

Read more

சச்சின் இதோ நூறாவது செஞ்சுரி

சச்சின் இதோ நூறாவது செஞ்சுரி, வி. கிருஷ்சாணி, தமிழில்-உதயகுமார், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக். 392, விலை 180ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-013-8.html விளையாட்டு விமர்சகரும், பத்திரிகையாளருமான வி. கிருஷ்ணசுவாமி எழுதிய புத்தகத்தின் தமிழ்ப் பதிப்புதான் ‘சச்சின் இதோ நூறாவது செஞ்சுரி’. இந்தத் தலைப்பைப் பார்த்ததும் இது சச்சினைப் பற்றியது என்று நினைத்தாலும், புத்தகத்தைப் படித்தபோது சச்சினின் சமகாலத்தில செஸ்ஸில் சாதித்த விஸ்வநாதன் ஆனந்த், டென்னிஸில் சாதித்த லியாண்டர் பயஸ் ஆகியோரின் சாதனைகளைப் பற்றிய தகவல்களும் இதில் […]

Read more

காலச்சுவடுகள்

காலச்சுவடுகள் – தெலுங்கு மூலம், நவீன், தமிழில் – இளம்பாரதி, சாகித்திய அகாதெமி, குணா பில்டிங், 443 அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18. பக். 1045, விலை 545ரூ. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு காஸ்ரீஸ்ரீ த.நா.குமாரசாமி, சுந்தர ராமசாமி ஆகியோர் மொழிபெயர்த்த நாவல்களைப் போன்ற அதே மொழிபெயர்ப்பை இந்த தெலுங்கு நாவலில் காண முடிகிறது. கதை மாந்தர்களின் உரையாடல் அனைத்தும் பேச்சு வழக்கில் மிக எளிமையாக நம் கிராமத்துக் கதை போலவே இருக்கிறது. மொழிபெயர்ப்பு என்ற உணர்வே தோன்றுவதில்லை. வாரங்கல் அடுத்த ஒரு சிறு […]

Read more

மங்களம் – சிகரம்

மங்களம் – சிகரம், ச.செந்தில் நாதன், சந்தியா பதிப்பகம், சென்னை 83, பக். 208, விலை 140ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-014-0.html சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குறைஞராக பணிபுரியும் நூலாசிரியரின் முதல் நாவல் இது. கணவன் மீது ஜீவனாம்ச வழக்குத் தொடுப்பதற்காக வரும் மங்களத்தின் கதைதான் இந்நாவல். ஆசிரியரே சொல்வது போல, இதில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் அவர் வழக்குரைஞர் தொழிலில் சந்தித்த பாத்திரங்கள், சம்பவங்கள்தாம் என்பதில் ஐயமில்லை. இந்த நாவல் மங்களம் என்ற பெண்ணின் அவலமிக்க வாவைச் […]

Read more
1 8 9 10 11