ராஜாஜி எழுதிய மதுவிலக்கு

ராஜாஜி எழுதிய மதுவிலக்கு, முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை 40, விலை 30ரூ. சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகக் கலந்து கொண்ட ரா44, மதுவிலக்கை அமல் நடத்த வேண்டும் என்பதற்காகவும், போராடி வந்தார். அதில் வெற்றியும் பெற்றார். தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. ஆனால் பிறகு தி.மு.க. ஆட்சியின்போது மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் மதுவிலக்கை வலியுறுத்தி ராஜாஜி எழுதிய கட்டுரைகள், மறு பதிப்பு செய்யப்பட்டு உள்ளன. மதுவிலக்கு பற்றியும் அக்காலத்தில் ராஜாஜி நடத்திய […]

Read more

மாலன் சிறுகதைகள்

மாலன் சிறுகதைகள், மாலன், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 416, விலை 200ரூ. TO buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8368-047-9.html ஆசிரியர் மாலன் பல்வேறு பத்திரிகைகளில் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய, 55 சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப் பெற்றுள்ளன. இலக்கியத் தரம் வாய்ந்த இச்சிறுகதைகள் பற்றி, தமிழன் தமிழ் இளைஞர்களின் இன்றைய நிலை குறித்து மாலன் மிக அக்கறையோடு தாயுள்ளத்தோடு யோசித்துள்ளார் என, கூறியுள்ளார் பிரபஞ்சன். ஆரோக்கியமான விவாதங்களை நம்முன் வைக்கும் சிறுகதை தொகுதி நூல். -கவுதம நீலாம்பரன்.   —- […]

Read more

பாரதத்தின் பேரரசி

பாரதத்தின் பேரரசி (சாதனை வரலாறு), அழகிய பாண்டியன், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி. நகர், சென்னை 17, பக். 504, விலை 360ரூ. TO buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-015-4.html முதல்வர் அம்மாவின் வாழ்க்கை சரிதத்தை புதுக்கவிதை நடையில் தந்துள்ளார் கவிஞர் அழகிய பாண்டியன். அம்மாவின் வாழ்வில் அவர் சந்தித்த தடைகள், இடையூறுகள், சூழ்ச்சிகள், சோதனைகள் என்று ஒன்றுவிடாமல் அலசி, அத்தனை சோதனைகளையும் சாதனைகளாக மாற்றிக் காட்டிய அவரது வீரத்தையும் காட்டி, அவரை பாரதத்தின் பேரரசியாக நம்முன் […]

Read more

தேவதாசியும் மகானும்

தேவதாசியும் மகானும், வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம், தமிழில் பத்மா நாராயணன், காலச்சுவடு பதிப்பகம், விலை 175ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-814-3.html தேவதாசிகள் என்று ஒரு குலம் உருவாக்கப்பட்டு சென்று நூற்றாண்டின் முன்பாதியிலேயே ஒழிக்கப்பட்டும் விட்டது. சங்கீத உலகில் அரும்பாடுபட்டுத் தமக்கென்று தனியிடம் அமைத்துக் கொண்ட பெங்களூரூ நாகரத்தினம்மா அந்த சமூகப் பிரிவைச் சேர்ந்தவர். நெஞ்சை உலுக்கி நிமிர வைக்கும் அவருடைய வாழ்க்கை வரலாறை தேவதாசியும் மகானும் என்ற தலைப்பில் வி.ஸ்ரீராம் ஆங்கிலத்தில் வெளியிட்டதை அழகாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார் பத்மா […]

Read more

சங்கர காவியம் – பூஜ்யஸ்ரீ காஞ்சி மகானின் புனித வாழ்க்கை வரலாறு

சங்கர காவியம் – பூஜ்யஸ்ரீ காஞ்சி மகானின் புனித வாழ்க்கை வரலாறு, டால்மியாபுரம் கணேசன், அகஸ்தியர் பதிப்பகம், விலை 250ரூ. எதையுமே கதை கட்டுரைகளைப் படிப்பதைவிட நாடக வடிவமாக்கித் தந்துவிட்டால் போதும். அப்படியே எடுத்துச் சுளைசுளையாய் விழுங்குகிற மாதிரி மனத்தின் உள்வாங்கிக் கொண்டுவிடலாம். இந்தக் கலையில் தாம் வல்லவர் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் டால்மியாபுரம் கணேசன். நடமாடும் தெய்வம் என்று பெருமையோடு வழிபட்ப்பட்ட காஞ்சி மகாப்பெரியவாளைப் பற்றிய பல நிகழ்வுகளைப் பலரும் பலவாறாகப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்கள். சென்ற நூற்றாண்டின் ஆன்மிக அற்புதம் அவர். […]

Read more

பாம்பின் கண்

பாம்பின் கண், சு. தியோடர் பாஸ்கரன், கிழக்கு பதிப்பகம், 177/103, முதல்தளம், அம்பாள் பில்டிங், லாய்ட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-701-5.html ஆவணம் நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவின் முறையான வரலாற்றை ஆவணங்களோடு தெரிந்து கொள்வதற்கு நம்பகமான ஆய்வு நூல்கள் சிலவே உள்ளன. அந்த வகையில் 1997இல் தியோடர் பாஸ்கரன் எழுதிய த ஐ ஆப் செர்பண்ட் என்ற ஆங்கில நூல் முக்கியமானது. அதுதான் தற்போது பாம்பின் கண் என்ற பெயரில் […]

Read more

வீணையின் குரல்

வீணையின் குரல் (எஸ். பாலசந்தர்-ஓர் வாழ்க்கைச் சரிதம்), விக்ரம் சம்பத், தமிழில்-வீயெஸ்வி, காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.கே. சாலை, நாகர்கோவில் 629001, பக். 600, விலை 350ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-0.html இந்தியாவின் மரபு மாறாத வீணை இசையை உலகெங்கும் முழக்கி வெற்றி வாகை சூடிய வீணை மேதை எஸ். பாலசந்தரின் வரலாற்று சுவடுகளை, ஒரு திரைப்படம் போல விக்ரம் சம்பத் இந்த நூலில் பதிவு செய்துள்ளார். பிறவிக் கலைமேதை பாலசந்தரின் சினிமா சாதனைகள், சங்கீத சாதனைகள், தனிமனித […]

Read more

தடம் பதித்த மாமனிதன் ரசிகமணி டி.கே.சி.

தடம் பதித்த மாமனிதன் ரசிகமணி டி.கே.சி., தி. சுபாஷினி, மித்ரஸ் பதிப்பகம், பக். 400, விலை 250ரூ. மனிதனாய், மாமனிதனாய் டி.கே.சி. தடம் பதித்த தன்மையைத் தடம் பதித்த மாமனிதன் என்ற தலைப்பில் நூலாக்கியிருக்கிறார் தி. சுபாஷினி. டி.கே.சியும் சான்றோர்களும் என்னும் பகுதியில் டி.கே.சி.யால் மதிக்கப் பெற்ற வள்ளுவர், பாரதி, கவிமணி, ராஜாஜி, காந்திஜி, ஆகியோர் பற்றியும் விளக்கப்பட்டிருக்கிறது. டி.கே.சி.யுடன் தொடர்பு கொண்டிருந்த கல்கி, ஐஸ்டிஸ் மகராஜன், வித்வான் சண்முகசுந்தரம், டி.டி. திருமலை, கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், வல்லிக்கண்ணன், ம.பொ.சி., தி.க.சி. முதலானோர் […]

Read more

சங்கச் செல்வி

சங்கச் செல்வி (செம்மொழிப் பெட்டகம்), முனைவர் சுந்தர ஆவுடையப்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, பக். 128, விலை 60ரூ. சங்க நூல்களில் உள்ள அரிய பொருட்கள் பற்றி அழகாக எடுத்துரைக்கும் 30 சிறிய கட்டுரைகளின் தொகுப்பு நூல். யவனர் என்னும் அயல்நாட்டார் பற்றியும், அசுணம் என்னும் விலங்கு பற்றியும் தெரிவிக்கும் இந்த நூல், பண்டைத் தமிழரின் பழக்க வழக்கங்களையும், பண்பாட்டையும் தெளிவாக விளக்குகிறது. வான்கேழ் வட்டம் என்னும் சந்தனம் அரைக்கும் வெள்ளைக்கல், இந்தியாவின் […]

Read more

பாரதத்தின் பேரரசி சாதனை வரலாறு

பாரதத்தின் பேரரசி சாதனை வரலாறு, அழகிய பாண்டியன், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 360ரூ. முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் இளமை வாழ்க்கை, திரைத்துறை வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை ஆகிய 3 பிரிவுகளாக பிரித்து 119 தலைப்புகளில் ஆழ்ந்த சிந்தனைகள் அடங்கிய கவிதை தொகுப்பாக நூலாசிரியர் அழகிய பாண்டியன் தந்துள்ளார். அரிய புகைப்படங்ளையும் இடையிடையே சேர்த்திருப்பது புத்தகத்தின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கிறது. அண்ணல் பிறந்தார் அஹிம்சை பிறந்தது, புத்தர் பிறந்தார் அன்பு பிறந்தது, அன்னை தெரசா பிறந்தார் […]

Read more
1 41 42 43 44 45 46