கலாம் காலம்

கலாம் காலம், ஆதனூர் சோழன், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் ரோடு, சென்னை 14, பக். 128, விலை 80ரூ. நல்ல புத்தகங்கள், நல்ல ஆசிரியர்கள், நல்ல மனிதர்கள் துணையோடு எவ்வளவு அறிவைப் பெற முடியுமோ அவ்வளவு அறிவை சேகரியுங்கள், கடுமையாக உழையுங்கள், விடா முயற்சியுடன் பிரச்னைகளை தோற்கடித்து வெற்றி பெறுங்கள் என்றெல்லாம் நம் நாட்டு இளைஞர்களை ஊக்குவிக்கும் அப்துல் கலாம், இளைஞர்களின் கனவு நாயகராக மாறிவிட்டவர். அப்துல் கலாமின் எழுச்சி மிக்க வரலாற்றைச் சொல்லும் உணர்ச்சிக்காவியம். -எஸ்.குரு.   —-   […]

Read more

பாரதியின் பராசக்தி

பாரதியின் பராசக்தி, டாக்டர் என். ஸ்ரீதரன், கங்கை புத்தகநிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017, பக். 238, விலை 70ரூ. சிவசக்தி என்ற கதையில், அன்னை பராசக்தியைப் பற்றி, பலர் கூறுவதை பாரதி தொகுத்துத் தருகிறார். சக்தியை, இயற்கை, ஐம்பூதங்கள், உயிர்த், தீ, அறிவு, சோதி, காளி, இன்பம், துன்பம் என அடுக்கடுக்காகச் சொல்கிறார். பாரதி அறுபத்தாறிலும், ஐம்பூதங்கள் சக்தியின் உருவே என்க கூறுகிறார். பராசக்தியைப் பற்றி, அமர கவி பாரதியின் பன்முகப் பார்வையைப் பதிவு செய்யும் இலக்கியப் பொக்கிஷம். […]

Read more

கல்கியின் சிறுகதைகள்

கல்கியின் சிறுகதைகள், நக்கீரன், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை மூன்று புத்தகங்களும் முறையே 100ரூ, 120ரூ, 130ரூ. சரித்திரக் கதைகள் எழுதுவதில் ஈடுஇணையற்றவராகத் திகழ்ந்த கல்கி சிறுகதைகள் எழுதுவதிலும் வல்லவராக விளங்கினார். காதல், வீரம், சோகம், நகைச்சுவை… இப்படி நவரசங்களும் கலந்தவை அவருடைய சிறுகதைகள். கல்கியின் மிகச்சிறந்த 55 கதைகளை தேர்ந்தெடுத்து 3 புத்தகங்களாக வெளியிட்டுள்ளது நக்கீரன். கல்கியின் மிகப் பிரபலமான வீணை பவானி, திருவழுந்தூர் சிவக்கொழுந்து, கேதாரியின் தாயார், அமரவாழ்வு, பொங்குமாங்கடல், புவிராஜா, சுபத்திரையின் சகோதரன் ஆகிய கதைகளும் […]

Read more

அன்புசேர் வாழ்க்கையிலே

அன்புசேர் வாழ்க்கையிலே, அமுதா கணேசன், தமிழன் நிலையம், 5, கௌடியா மடம் சாலை, இராயப்பேட்டை, சென்னை 600014, பக். 368, விலை 150ரூ. காதல் என்பது தென்றலா? புயலா? சுனாமியா? என்ற கேள்வி எழ, அதற்கு விடையாக இந்நூலைப் படைத்துள்ளார் ஆசிரியர். இந்நூலில் 3 காதல் ஜோடிகள் இடம்பெறுகின்றனர். காதலர்கள் கடற்கரை, ஹோட்டல், பேருந்துப் பயணம் என ஊர் சுற்றுவதையும், அவர்களின் எல்லை மீறல்களையும் குறிப்பிட்டுள்ள ஆசிரியரின் எழுத்துத்திறன், இப்புத்தகத்தைப் படிப்பவர்களைக் கிளுகிளுப்படையச் செய்யும். பெற்றோரின் அன்புக்கு மாறாக எதையும் செய்ய முடியாமல், 2 […]

Read more

மருதநாயகம் கான் சாகிப்

மருதநாயகம் கான் சாகிப், செ. திவான், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 160, விலை 80ரூ.  To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-009-0.html மருதநாயகம் கான் சாகிப்பின் வீர வாழ்க்கையைக் கூறும் நூல். மருதநாயகம் கான் சாகிப் பிறவியிலேயே முகம்மது யூசுப் என்னும் இஸ்லாமியரா? இல்லை வேளாளர் குலத்தில் பிறந்த மருதநாயகமா? என்பன போன்ற சர்ச்சைகளை விவரிக்கும் நூலாசிரியர் முடிவை வாசகர்களிடமே விட்டுவிடுகிறார். பிரெஞ்ச் படையில் போர் வீரனாகச் சேர்ந்த மருதநாயகம் கான் சாகிப் ஆற்காட்டுப் போரில் ஈடுபட்டதையும், துரோகத்தால் […]

Read more

பிரேம்சந்த் கதைகள்

பிரேம்சந்த் கதைகள், லதா ராமகிருஷ்ணன், நியூ செஞ்சுவரி புக் ஹவுஸ், 41பி சிட்கோ இண்டஸ்ட்ரீஸ் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 190ரூ. To buy this book online – https://www.nhm.in/shop/100-00-0001-009-7.html பள்ளிக்கூட ஆசிரியராக இருந்த பிரேம்சந்த் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பதற்காக பதவியை துறந்தவர். இலக்கிய பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இவர் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர். அவருடைய படைப்புகளில் வறுமையும், துயரமும் அதிகமாக காணப்படுகிறது. இந்த புத்தகத்தில் 12 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் அழகாக தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். […]

Read more

எப்போது அழியும் இந்த உலகம்

எப்போது அழியும் இந்த உலகம்?, ராஜ் சிவா, உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-806-7.html டிசம்பர் 21ஐ மறந்துவிட்டு எல்லோரும் ஒரு சினிமாவைப் பார்க்க முடியுமா. முடியாதா என்ற கவலையில் அடுத்த மாதம் இறங்குவார்கள் என்று தெரிந்திருந்தால், மாயன் காலண்டர் பரபரப்பை உருவாக்கியவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பார்கள். அந்த அளவு பரபரப்பை உருவாக்கிய ஒரு நாளுக்குப் பின்னே என்ன இருந்தது? இந்த பரபரப்பை ஒட்டி இந்த உலகத்தில் என்னவெல்லாம் நடந்தன? […]

Read more

இருளர்கள்

இருளர்கள், குணசேகரன், கிழக்கு பதிப்பகம், பக்கம்:128. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8368-808-6.html இந்திய பழங்குடி இனங்களில் அவர்களுக்கொன்று ஒரு தனி இடம் இருக்கிறது. பிறரது நிலங்களில் பணியாற்ற மாட்டார்கள். யாருக்காகவும், எதற்காகவும், தங்கள் தன்மானத்தை விட்டு கொடுக்க மாட்டார்கள். பணம் மீதும் பொருள் மீதும் பெரிய நாட்டமில்லை. பெண்களை கொண்டாடி, போற்றும் மரபு அவர்களுடையது. இசை மீது தீராத மோகம், சிறிதளவே இருந்தாலும், கிடைப்பதை பகிர்ந்து உண்ணும் பண்பு, அசாதாரண இறை பக்தி, கூர்மையான அறிவாற்றல், கொடிய விலங்குகளை […]

Read more

பாலபாடம்

பாலபாடம், அப்துல் ரஹிமான், ராயல் கம்யூனிகேசன், 844, இ3, எல்.எம். ஆர். தெரு, கோட்டை, கோயம்புத்தூர் 641001, விலை 80ரூ. குழந்தைகள் வாழ்வில் கண்டிப்பாக அறிய வேண்டிய அடிப்படை விஷயங்களை பாலபாடமாக்கி தந்திருக்கிறார் நூலாசிரியர் அப்துல் ரஹிமான். நல்லவற்றைக் கூட்டிக்கொள். தீயவற்றைக் கழித்துக்கொள் என்று பயனுள்ளவற்றையும், ஆபத்துக்கு உதவாப் பிள்ளை, குரு மொழி கொள்ளா சீடன், கோபத்தை அடக்காத வேந்தன் ஆகியோர் பயனற்றவர்கள் என்று பயனற்ற நடத்தைகளையும் இலக்கிய உதாரணங்களுடன் விளக்குகிறார். அன்றாட நிகழ்வுகளின் வழியே நமது பண்பாட்டையும் கற்பிக்கிறது இந்த பாலபாடம்.   […]

Read more

முத்திரை நினைவுகள்

முத்திரை நினைவுகள், ஜே. எம். சாலி, இலக்கிய வீதி, சென்னை 101, பக்கங்கள் 144, விலை 120ரூ எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜே.எம். சாலி தனது எழுத்துலக அனுபவங்களை இந்நூலில் எழுதியுள்ளார். 1955இல் கண்ணன் சிறுவர் இதழுக்கு எழுத ஆரம்பித்த அவர், அதற்குப் பின்பு தமிழகத்தின் பிரபல இதழ்கள் எல்லாவற்றிலும் எழுதிவிட்டார் என்பது நம்மை வியக்க வைக்கிறது. பிரபல பத்திகையாளர்களான சாவி, இதயம் பேசுகிறது, மணியன், கல்கி ராஜேந்திரன் உட்பட பல பத்திகையாளர்களுடன் நூலாசிரியருக்கு இருந்த தொடர்புகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனந்தவிகடன், சிங்கப்பூர் தமிழ் […]

Read more
1 42 43 44 45 46