உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள், தொகுப்பாசிரியர்-கோபிநாத் மொகந்தி, தமிழில்-ஆனைவாரி ஆனந்தன், சாகித்ய அகாதெமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 208, விலை 125ரூ. ஒரிய மொழியில் எழுதப்பட்ட இச்சிறுகதைத் தொகுப்பில், மலைகளில் ஒற்றையடிப் பாதைகளின் ஊடே சரிவுகளில் ஜீவ மரண போராட்டங்களும், அங்கு வாழும் பெண்களின் சுய கௌரவமும், சங்கடமான நிலைமைகளும், சுதந்திரத்துக்குப் பிறகான ஒரிய கிராமப்புற வாழ்வில் ஏற்பட்ட அரசியல் தாக்கங்களும் என்று பல கருப்பொருட்களைத் தாங்கி 13 அற்புதமான சிறுகதைகளாக மலர்ந்திருக்கின்றன. உதாரணமாக எறும்பு என்ற சிறுகதையில் ஓர் […]

Read more

தெருக்கூத்து கலைஞர்கள்

தெருக்கூத்து கலைஞர்கள், கோ. பழனி, சி. முத்துகந்தன், போதிவனம். To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-492-2.html தமிழ் மண்ணில் கூத்து, நாடகம், கதை சொல்லல், ஆட்டங்கள், இசை தொகுப்புகள் என, பல்வேறு நிகழ்த்து கலைகள் உள்ளன. கேரளத்து கதகளி, கர்நாடகத்து யட்சகானம், ஆந்திரத்து வீதிநாடகா ஆகியன போன்று தமிழகத்தில் தனித்தன்மை வாய்ந்த ஒரு முழுமையான அரங்காக தெருக்கூத்து விளங்குகிறது. இந்த கலைகள் அந்தந்த மாநிலத்தவர்களால், அங்கீகரிக்கப்பட்டது போல தெருக்கூத்து தமிழர்களால் அங்கீகரிக்கப்படவில்லை என்ற கசப்பான உண்மையை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். […]

Read more

மனிதன்

மனிதன், ஆர். ராமநாதன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 24, கிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை 17, விலை 90ரூ. நாம் பல வரலாறுகளைப் படிக்கிறோம். ஆனால் நமது மனித இன வரலாறு நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அறிவியல் சார்ந்த இந்நூல் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.   —-   தமிழ்ச் சொற்கள் (சொற்பொருள் விளக்கம்), முனைவர் அ. ஜம்புலிங்கம், இந்துமதி பதிப்பகம், 3, லால்பேட்டை தெரு, சிதம்பரம் 608001, விலை 150ரூ. செம்மொழியாம் தமிழ் மொழியில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் […]

Read more

குமுதம் சக்ஸஸ்

குமுதம் சக்ஸஸ், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 128, விலை 25ரூ. ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன. அடுத்து என்ன கோர்ஸ் படிப்பது? எந்த கல்லூரியில் சேர்வது? என்ற குழப்பம் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும். கூடவே, நமக்கெல்லாம் அண்ணா பல்கலையில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது. அப்படியே கிடைத்தாலும் வங்கிகளில் கல்விக் கடன் கிடைக்குமா? இப்படிப் பல்வேறு கேள்விகள் உங்களுக்கு எழலாம். அவற்றிற்கெல்லாம் அந்தந்த துறை வல்லுநர்களைக் கொண்டே எளிமையாக பதில்களைக் கொடுத்திருப்பதுதான் குமுதம் சக்ஸஸ் நூலின் […]

Read more

ஹைகூ வானம்

ஹைகூ வானம், வீ. தங்கராஜ், அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 11, பக். 104, விலை 60ரூ. அவன் தைத்த செருப்பில் ஊரே நடக்கிறது அவனுடையது கக்கத்தில் தங்கராஜின் ஹைகூவில் ஒரு பருக்கை பதம் இது. மெல்லப்போ தென்றலே வழியில் கருவேல மரங்கள். இந்த ஹைகூ உணர்த்தும் காட்சி மிகப் பெரியது. விரித்து எழுதினால் ஒரு ஆயிரம் பக்கங்களுக்கு இதை எழுத முடியம். அதை மூன்றடியில் அளந்திருக்கிறார் கவிஞர். ஹைகூ எழுதுவது கடினமான பணி. அது ஆசிரியருக்கு […]

Read more

முத்திரைச் சிறுகதைகள்

முத்திரைச் சிறுகதைகள், ஆர்னிகா நாசர், மேகதூதன் பதிப்பகம், 7, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, பக். 208, விலை 130ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-718-0.html ஆர்னிகா நாசர் நிறைய இதழ்களில் அடிக்கடி எழுதுபவர். பிரபலமான எழுத்தாளர். இவருக்கென்று ஒரு பெரிய வாசகர் கூட்டம் இருக்கின்றது. இவர் எழுதும் பாணியில், புதுமை இருக்கும். எழுத எடுத்துக் கொள்ளும் கதை கருக்களில் புதுமையும், வித்தியாசமும் இருக்கும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாவல்களும் எழுதியுள்ள ஆர்னிகா நாசர், தாம் எழுதியவற்றுள் சிறந்த […]

Read more

உடன்கட்டை

உடன்கட்டை (ஒரு வரலாற்று ஆய்வு), செ. ஜெயவீரதேவன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 112, விலை 50ரூ. உடன்கட்டை ஒழிப்பு என்றதும், நமக்கு ராஜாராம் மோகன்ராய் நினைவுக்கு வருகிறார். டிசம்பர் 4, 1829ல் வில்லியம் பெண்டிங் பிரபு உடன்கட்டை ஏறுவது, சட்ட விரோதமான தண்டனைக்குரிய குற்றம் என சட்டம் இயற்றினார். இச்சட்டத்திற்குப் பின்தான் இந்தியாவில் உடன்கட்டையேறும் வழக்கம் ஒழிந்தது. இந்நூலில் இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் உடன்கட்டையேறும் வழக்கம் இருந்ததையும், அதற்கான காரணங்களையும் அதை ஒழிக்கச் சட்டங்கள் வந்தது […]

Read more

மொழிபெயர்ப்பு ஒரு கவின்கலை

மொழிபெயர்ப்பு ஒரு கவின்கலை, வி. சந்திரன், உலக தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழிநுட்ப வளாகம், சென்னை 113, பக். 170, விலை 75ரூ. நூலின் தலைப்பில் நூலாசிரியர் நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவின் நூல் வடிவம் இது. தமிழ் மொழியுடன், பிறமொழியிலும் சிறப்பான பாண்டித்தியம் உள்ளவர்களால் மட்டுமே, மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட முடியும். மொழிபெயர்ப்புக்கு இலக்கணம் இருக்கிறது. மேலும், மொழிமாற்றம், செய்யப் பெற்றதும், இலக்கிய அந்தஸ்தைப் பெறக்கூடியதுதான். நிர்வாகம், சட்டம், தொழில்நுணுக்கம் ஆகிய துறைகளில் மொழிபெயர்ப்பில் ஈடுபடுகையில், புதிய சொல்லாக்கம் தவிர்க்க […]

Read more

புதுக்கவிதை மொழி

புதுக்கவிதை மொழி, முனைவர் மா. கோவிந்தராசு, பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 225, விலை 125ரூ. கவிதை வடிவமோ, கவிதைத் தன்மையோ மொழிக் கட்டமைப்போ இல்லாமல் கவிதை எழுதக்கூடாது என்கிறார் ஆசிரியர் மொழியின் மரபினையும், அமைப்பினையும் அறிந்து கவிதை படைக்க வேண்டும் என்கிறார். எழுத்து, சொல், தொடர் அமைப்பு, புதுக்கவிதையில் எவ்வாறு வரவேண்டும், எவ்வாறு வரக்கூடாது என்றெல்லாம் விளக்குகிறார். (உதாரணம்) கவிதைக்கு மொழித் தூய்மை இன்றியமையாததாகும். வழக்கில் உள்ள செந்தமிழ்ச் சொற்களே கவிதையில் இடம் பெற […]

Read more

பொன்மலர்

பொன்மலர் (சமூக நாவல்), அகலின், தாகம், பு.எண் 34, ப.எண் 35, சாரங்கபாணி தெரு, தி.நகர், சென்னை 17, பக். 194, விலை 80ரூ. கலைமகள் இதழில் தொடராக வந்து, பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் பாராட்டைப் பெற்ற நாவல், இப்போது புத்தக வடிவு பெற்று, 15ம் பதிப்பாக வந்திருக்கிறது. ரஷ்ய, சீனா, ஆகிய மொழிகளிலும், இந்திய மொழிகளான குஜராத்தி, ஓரிய, மலையாள, கன்னட மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் நாயகி டாக்டர் சங்கரி ஒரு வித்தியாசமான பாத்திரம், நாவல் பிரியர்களுக்கு ஒரு நல்ல விருந்து. நன்றி: தினமலர், […]

Read more
1 7 8 9 10 11 12