போதியின் நிழல்

போதியின் நிழல், அசோகன் நாகமுத்து, அந்திமழை, ஜி4, குருவைஷ்ணவி அப்பார்ட்மென்ட்ஸ், 20, திருவள்ளுவர் நகர், மெயின்ரோடு, கீழ்க்கட்டளை, சென்னை 600117, பக். 266, விலை 180ரூ. உலக வரலாற்றை, பயணிகள்தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களின் சாகசங்களும் அறிவார்ந்த செயல்களும் உலக வரலாற்றின் நீள அகலங்களை மாற்றி அமைத்திருக்கின்றன. ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தின் மூலம் நமக்கு ஒரு வரியில் அல்லது ஒரு பத்தியில் மட்டுமே அறிமுகமான சீனப் பயணி யுவான் சுவாங்கின் இந்திய பயணம்தான், அசோகன் நாகமுத்துவின் இந்த நாவல். நாட்டைவிட்டு இன்னொரு […]

Read more

சேரன் குலக்கொடி

சேரன் குலக்கொடி, கோவி. மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், சென்னை 108, பக். 572, விலை 425ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-2.html தமிழர் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு புனையப்பட்டுள்ள வரலாற்றுப் புதினம். இசையும், நாட்டியக் கலை நுணுக்கங்களும் இடம் பெற்றுள்ள இந்த நாவல், பண்டைய தமிழக வரலாற்றை நம் கண் முன் நிறுத்துகிறது. வானவன் வஞ்சி, மீனவன் மோகூர் ஆகிய இரு காண்டங்களைக் கொண்டுள்ள இந்த படைப்பு 1972இல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற நாவல் என்பது […]

Read more

சேரன் குலக்கொடி

சேரன் குலக்கொடி, பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, (பிராட்வே), சென்னை 108, விலை 425ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-2.html வீரமும் காதலும் விளங்கத் தோன்றிய பழந்தமிழகத்தின் வரலாற்றினை நிலைக்களனாகக் கொண்டு, மனதை மயக்கி மகிழவைக்கும் சொக்கு நடையில் படைக்கப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சேரன் செங்குட்டுவனின் மனையாள், வேண்மாள், வேண்மாளின் தங்கை பொற்கொடி, அழகின் திரட்சியும், அறிவின் முதிர்ச்சியும், பண்பின் ஒசிவும், அன்பின் கசிவும் கொண்டு திகழ்ந்த பொற்கொடிகள் சேரன் குலக்கொடி. அவள் கற்பின் கனலியாக […]

Read more

ஊமையன் கோட்டை

ஊமையன் கோட்டை, கவிஞர் கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக். 168, விலை 70ரூ. To buy this Tamil book  online – www.nhm.in/shop/100-00-0001-136-2.html ஆதாரப்பூர்வ சரித்திர பின்னணியோடு திரைப்படம் எடுக்கும் நோக்கிலேயே இந்த நாவலை எழுதியுள்ளார் கண்ணதாசன், கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட 15 மாதங்களுக்குப் பின் சிறையில் இருக்கும் ஊமைத்துரையை விடுவிக்கும் முயற்சியில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபடுவதிலிருந்து கதை தொடங்குகிறது. ஊமையன்கோட்டையைப் பற்றி குறைவான செய்திகளையே அளித்திருக்கிறார். கதையின் நாயகனான ஊமைத்துரை இருந்தபோதும், வீரத்தேவன் என்ற மறவர்குல இளைஞனை சுற்றியே கதை […]

Read more

கபிலர்

கபிலர், கா. அரங்கசாமி, சாகித்திய அகாதெமி, குணா பில்டிங், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 50ரூ. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கப் புலவர்களால் போற்றப்பெற்றவர் கபிலர். திருகோவிலூர் பாடல் கல்வெட்டு இவர் பெருமையை பறைசாற்றுகிறது. கபிலர் குறித்து பல தமிழார்வலர்கள் புத்தகங்கள் எழுதியுள்ளனர். ஆனால் கபிலரின் வரலாற்றையும், கபிலரின் தமிழியல், ஆளுமைத்திறன், இலக்கியக் கோட்பாடுகள் குறித்து மாறுபட்ட கோணத்தில் படம்பிடித்து காட்டுகிறார் கல்வெட்டியல் புலமை பெற்ற நூலாசிரியர் கா. அரங்கசாமி. நன்றி: தினத்தந்தி 10/4/13.   —-   சாம்ராட் […]

Read more

கங்காபுரிக் காவலன்

கங்காபுரிக் காவலன், விக்கிரமன், ஆலயா, 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வ.உ.சி. நகர், பம்மல், சென்னை 75, விலை இரண்டு பாகங்களும் சேர்த்து 500ரூ. ராஜராஜசோழனின் மகனான ராஜேந்திர சோழன், தந்தைக்கு நிகராக சரித்திரத்தில் இடம் பெற்றவர். ராஜராஜன் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டினார். ராஜேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கினார். இதன் பின்னணியில் கங்காபுரிக்காவலன் வரலாற்று நாவலை இரண்டு பாகங்களில் எழுதியுள்ளார், கலைமாமணி விக்கிரமன். பொன்னியின் செல்வனுக்குத் தொடர்ச்சியாக நந்திபுரத்து நாயகியை எழுதி சாதனை படைத்த விக்கிரமன், கங்காபுரிக் காவலனை சிறப்பாக எழுதி […]

Read more

சின்ன அரயத்தி

சின்ன அரயத்தி, மலையாள மூலம்-நாராயணன், தமிழில்-குளச்சல் மு. யூசுப், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, பக். 280, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-515-7.html ஆசிரியரின் (மலையாள மூலம்) முதல் படைப்பான இந்த நாவல் சாகித்ய அகடமி, கேரள சாகித்ய அகடாமி, தோப்பில் ரவிவிருது, அபுதாபி தி விருது என்று ஏகப்பட்ட விருதுகளை பெற்ற ஒன்று. கேரளத்தின் ஆதிவாசிச் சமூகமான மலையரையர்களை குறித்து ஆதிவாசி ஒருவரே எழுதிய நாவல். இடுக்கி மாவட்ட பழங்குடியினரின் பண்பாடு, […]

Read more

மங்களம் – சிகரம்

மங்களம் – சிகரம், ச.செந்தில் நாதன், சந்தியா பதிப்பகம், சென்னை 83, பக். 208, விலை 140ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-014-0.html சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குறைஞராக பணிபுரியும் நூலாசிரியரின் முதல் நாவல் இது. கணவன் மீது ஜீவனாம்ச வழக்குத் தொடுப்பதற்காக வரும் மங்களத்தின் கதைதான் இந்நாவல். ஆசிரியரே சொல்வது போல, இதில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் அவர் வழக்குரைஞர் தொழிலில் சந்தித்த பாத்திரங்கள், சம்பவங்கள்தாம் என்பதில் ஐயமில்லை. இந்த நாவல் மங்களம் என்ற பெண்ணின் அவலமிக்க வாவைச் […]

Read more

கனவு மெய்ப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும், தமிழருவி மணியன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 600002, பக்கங்கள் 192, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-834-1.html தேசிய, இலக்கிய படைப்பாளி தமிழருவி மணியன். எழுத்திலும், பேச்சிலும் வெற்றிக் கொடி நாட்டிய இவர் மகாகவி பாரதியாரின் கவிதைகளிலும், கட்டுரைகளிலும், வாழ்விலும் புதைந்து கிடக்கும் புதுமைகளை, இந்த நூலில் வெளிப்படுத்துகிறார். தன்னைப் பற்றியே நினைத்து வாழ்ந்த சராசரி மனிதர்களுக்கு நடுவே மண்ணைப் பற்றியே சிந்தித்து செயற்பட்ட மகாகவியைக் காட்டுகிறார் மணியன். பாரதியைப் புதிய […]

Read more

பகவான் ஸ்ரீ ராம கிருஷ்ணரின் ஆன்மீக சாதனைகளும் உபதேசங்களும்

பகவான் ஸ்ரீ ராம கிருஷ்ணரின் ஆன்மீக சாதனைகளும் உபதேசங்களும், வை. மயில்வாகணன், சுவாமி விவேகானந்தர் விழித்தெழு பிரச்சாரக்குழு, பக்கங்கள் 253, விலை 80ரூ. கலாதர் என்னும் இயற்பெயர் கொண்ட ராமகிருஷ்ண பரமஹம்சரின், பிறப்பு முதல் முக்திவரை உள்ள, அனைத்து நிகழ்வுகளையும் தொகுத்துத் தருகிறது இந்த நூல். காளிதேவியைக் கண்ணால் கண்ட ராமகிருஷ்ணர், தன் சீடர்களில் ஒருவரான விவேகானந்தருக்கு இறை ஆற்றலை வெளிப்படுத்திய விதம், இந்த நூலில் நன்கு விளக்கப்பட்டுள்ளது. இந்த உலக வாழ்க்கையானது, இறைநிலையை அடைவதற்கு வழங்கப்பட்ட சாதனம் என்பதனை, இந்த நூல் தெளிவாக […]

Read more
1 3 4 5 6