விழிகளில் தெரிகிறது வெளிச்சம்

விழிகளில் தெரிகிறது வெளிச்சம், கவிஞர் தி. வேதரெத்தினம், நாகப்பட்டினம், விலை 50ரூ. ஓட்டைக் குடிசைகளில் இலவச மின்விளக்கு நிலவு, பாதசாரிகளின் இலவச விடுதி மரங்கள் இதுபோன்ற பல்வேறு கவிதை தொகுக்கப்பட்ட நூலாகும். நன்றி: தினத்தந்தி, 6/5/2015.   —-   ஆஞ்சநேயர் கதைகள், பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன், அமராவதி பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. ஆஞ்சநேயர் பற்றி குழந்தைகளும், பெரியவர்களும் தெரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் நூலாசிரியர் எழுதி வடிவமைத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 29/4/2015.   —- உருதுக் கதைகள், முக்தார் பத்ரி, […]

Read more

மழைநாளின் காகிதக் கப்பல்

மழைநாளின் காகிதக் கப்பல், வழக்கறிஞர் கே. சாந்தகுமாரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, பக். 108, விலை 90ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-424-8.html ஒரு நிகழ்வு பார்க்கும்போது தரும் அர்த்தம் வேறு. சாந்தகுமாரியின் கவிதை வார்ப்புக்குள் வரும்போது தரும் அர்த்தம் வேறு. சமூக அக்கறையும் உலகப் பார்வையும் கொண்ட வீரியம்மிக்க, மனித நேயக் குரலாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சம்பிரதாயத்தை உடைக்கும் துணிச்சல் தெரிகிறது. சமாதானம், நடுநிலை என்பதெல்லாம் மாயவேலி என அடையாளம் காட்டி, அதைத் தகர்த்தெறிகிறார். அரிதாரம் பூசாத […]

Read more

வனமிழந்த கதை

வனமிழந்த கதை, கே. ஸ்டாலின், வம்சி புக்ஸ், திருவண்ணாமலை, பக். 87, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-425-9.html உணர்ச்சிகளில் இருந்து தப்பிச்செல்ல முயலும் ஒவ்வொரு கவிஞனும், உணர்ச்சிகளில் இருந்துதான் தன் கவிதையைத் தொடங்கியாக வேண்டும். இப்படியான ஒரு அனுபவத்தையே கே. ஸ்டாலின் இக்கவிதைகள் உணர்த்துகின்றன. கவித்துவமும் மனிதத் தன்மையும் ஒருவகையில் உணர்ச்சிகளின் தூண்டுதலில் இருந்தே அடையாளம் காணப்படுகின்றன. திருவிழாவின் குப்பைகளைக் கிளறிக்கொண்டிருக்கும் பைத்தியமொன்றின் கைகளில் கிடைக்கக்கூடும் யாரோ யாருக்கோ அன்பொழுகத் தந்து தவறிப்போன சிறுபரிசொன்று என்ற கவிஞரின் […]

Read more

கலீல் ஜிப்ரான் கவிதைகள் 1, 2

கலீல் ஜிப்ரான் கவிதைகள் 1, 2, கலீல் ஜிப்ரான், கிருஷ்ணபிரசாத், காவ்யா, தொகுதி 1, பக். 1412, தொகுதி 2, பக். 1312, விலை ரூ.1400, 1300. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-319-7.html கலீல் ஜிப்ரான் ஒரு கவிஞர், ஓவியர், சிற்பி, எழுத்தாளர், தத்துவஞானி, இறையியலாளர். அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் ஒரு சேர படிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பது அரிது. அதுவும் தமிழில் சாத்தியம் குறைவே. அந்தக் குறையை நிறைவாக செய்திருக்கிறார் கிருஷ்ணபிரசாத். முதல் தொகுதியில் கலீல்ஜிப்ரான் கவிதைகளான […]

Read more

பிரிவை நேசித்தவன்

பிரிவை நேசித்தவன், அம்பி. ராஜேந்திரன், முல்லை பதிப்பகம், சென்னை, விலை 40ரூ. பாசத்தின் உணர்வுகளையும், தாய்மையின் உயர்வையும், உலக நடப்புகளையும் கவிதை வரிகளில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 22/4/2015.   —- நானொரு சிந்து, இசைப்பிரியன், இசை ஆலயம் மியூசிக் புக் பப்ளிகேஷன், சென்னை, விலை 70ரூ. நடப்பது நடக்கட்டும், எதைக்கொண்டு உட்பட பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட பல்வேறு கவிதை தொகுப்புகள் இடம் பெற்ற நூலாகும். நன்றி: தினத்தந்தி, 22/4/2015.   —- […]

Read more

சென்று வா உறவே சென்று வா

சென்று வா உறவே சென்று வா, கவிஞர் தியாரூ, ஜேபிரூபன் பப்ளிகேஷன்ஸ், பக். 122, விலை 100ரூ. இரண்டே இரண்டு பாத்திரங்கள். தமிழமுதன் மற்றும் வதனா. தமிழமுதன் வதனாவைக் காதலிக்கிறான். காதல் புலம்பல்களாக மட்டும் இல்லாம் சமூக சிந்தனைகளும் அந்த காதல் வெளிப்பாடுகள் ஊடே விரவிக்கிடப்பதுதான் இந்த நூலின் தனிச்சிறப்பு. பிளாட்பாரவாசிகளின் பிள்ளைகளைப் பார்த்தால், நாட்டின் எதிர்காலம் பயங்கரமாக தெரிகிறது. பாவம். ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாடாவது, அவர்களுக்கு ஒழுங்காகக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் பட்டினத்தில் சிற்றுண்டிச் சாலைகளுக்கும், தரமிக்க உணவு […]

Read more

கவியமுதம்

கவியமுதம், கவிஞர் இரா. இரவி, வானதி பதிப்பகம், சென்னை, பக். 172, விலை 100ரூ. கவிஞர் இரா. இரவியின் கவிதைகள் ஒவ்வொன்றிலிருந்தும் தமிழின்-தமிழனின் உயிர்த் துடிப்பு கேட்கிறது. சமூக அவலங்களை எதிர்க்கும் ஒரு கலகக்குரல் கேட்கிறது. மொழியின் ஆன்மா தெரிகிறது. முற்போக்குச் சிந்தனையின் முகவரி தெரிகிறது. சமரசம் செய்து கொள்ளாத கொள்கை தெரிகிறது. காமராசரையும் பெரியாரையும் பாரதிதாசனையும் இன்னும் பல அறிஞர்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உழைப்பு தெரிகிறது. எதிர்காலம் குறித்த நம்பிக்கை விதையை விதைக்கும்போக்கு தெரிகிறது. காதலின் வலிமையும் மேன்மையும் தெரிகிறது. […]

Read more

கவி கா.மு. ஷெரீப் திரை இசைப்பாடல்கள்

கவி கா.மு. ஷெரீப் திரை இசைப்பாடல்கள், தொகுப்பாசிரியர் பொன்.செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 50ரூ. புகழ்பெற்ற கவிஞர்களின் திரையிசைப் பாடல்களை ஆண்டு வரிசைப்படி தொடர்ந்து தொகுத்துவரும் தொகுப்பாசிரியர் கவிஞர் பொன்.செல்லமுத்து இம்முறை தொகுத்தளித்திருக்கும் நூல் கவி கா. மு. ஷெரீப் திரை இசைப்பாடல்கள். கவி. கா. மு. ஷெரீப் 1949 முதல் 1963 வரை 14 ஆண்டுகளில் 30 படங்களில் 90 பாடல்கள் எழுதியுள்ளார். கா. மு. ஷெரீப்பின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பும் இடம் பெற்றுள்ளது. பணம் பந்தியிலே குணம் […]

Read more

மின்புறா கவிதைகள்,

மின்புறா கவிதைகள், சீராளன் ஜெயந்தன், மெய்ப்பொருள் வெளியீடு, சென்னை, விலை 180ரூ. காலம்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள, வாழ்வனுபவம் சார்ந்து வெளிப்படுத்தப்படும் படைப்புகளையே தமிழ்க் கவிதையும் நம்பியிருக்கிறது. சீராளன் ஜெயந்தனின் ‘மின்புறா கவிதைகள்’ நூலில் ஒரு குறுங்காவியம் உட்பட 56 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. தமிழ் வாழ்வின் அன்றாடப்பாடுகளை, அரசியலை, அதிவேகப் பாய்ச்சல் காட்டும் நவீன அறிவியலையும் கூட உள்வாங்கிப் பிரதிபலிக்கும் கவிதைகளாக இருக்கின்றன. எளிமை தனக்கே உரிய கம்பீரத்துடன் ஊடாடும் மொழியில் முதல் வாசிப்பிலேயே நம்முடன் நேரடியாக உறவாடக் கூடியவை இந்தக் கவிதைகள். “முதுகில் […]

Read more

எப்படியும் சொல்லலாம்

எப்படியும் சொல்லலாம், இரா. எட்வின், சந்தியா பதிப்பகம், சென்னை, பக். 80, விலை 65ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-205-6.html ஆசிரியராக பணியாற்றும் கவிஞர் இரா. எட்வினின் முதல் கவிதை தொகுப்பு ‘எப்படியும் சொல்லலாம்’. மனைவியின் பெயரில் எழுதும் எழுத்தாளன், தன் கையில் காசில்லாத நிலையை குழந்தைகளிடம் அப்படி(யும்) சொல்லலாம் என யோசிக்கும் ஏழை, மனிதனை மலம் திண்ண வைத்த சாதிய கொடுமை, பாதுகாப்பின் பேரில் ராணுவம் மேற்கொள்ளும் வன்முறை, வட்டி வசூலிக்க வந்தவரிடம் அன்புடன் தாவும் குழந்தை, பள்ளிகளின் […]

Read more
1 31 32 33 34 35 57