அடை மழை

அடை மழை, ராமலக்ஷ்மி, அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம், விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-197-4.html எழுத்தாளர் ராமலக்ஷ்மி பன்முகத் திறன் கொண்டவர் என்பதைத் தமது முதல் சிறுகதைத் தொகுப்பிலேயே அடையாளப்படுத்தியிருக்கிறார். அழகியலோடு இவர் எடுத்த புகைப்படமே இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான அடைமழை புத்தகத்தின் அட்டைப் படமாகி அலங்கரிக்கின்றது. அடை மழையில் 13 சிறுகதைகள் நனைந்திருக்கின்றன. மேல்தட்டு, கீழ்தட்டு உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்க்கையில் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, சவால்களை மிக மிக யதார்த்தமாய், எளிய நடையில் கிராமிய […]

Read more

தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம் (இரு நூல்கள்), லக்ஷ்மிவேல், ராஜாத்தி பதிப்பகம், சென்னை, விலை தலா 40ரூ. நாட்டில் அதிகரித்து வரும் வீட்டு வாடகையை பார்க்கும்போது, சொந்தமாக ஒரு குடிசை வீடு கட்ட கையளவு நிலமாவது வாங்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் எழுவது இயற்கை. அதற்காக பல வருடம் கஷ்டப்பட்டு குருவி சேர்த்தாற்போல் பணத்தை சேர்த்து ஒரு இடத்தை வாங்கிய பின், அதில் வில்லங்கம் முளைத்தால், பெரும் ஏமாற்றமாகிவிடும். எனவே நிலம் வாங்குவது, விற்பது குறித்த முழுமையான விபரங்களை அறிவது மிக முக்கியம். குறிப்பாக […]

Read more

அம்மா

அம்மா, சுப்ரஜா, வாதினி, சென்னை, பக். 128, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-215-9.html ஜனரஞ்சகமான கதைகள் எழுதிவரும் சுப்ரஜா, ஒரு சுவாரஸ்யமான கதாசிரியர். வார்த்தைச் சிக்கனம், அந்தச் சிக்கனமான வார்த்தைகளுக்கும் ஒரு வசீகரம், கவர்ச்சி, மிக ஆழமான கதைக் கருவை லகுவாகக் கையாளும் எழுத்துத் திறன், ஐம்பது காசு என்ற கதையும், ஸ்டார்ட் ஆக்ஷன் கதையும் இவரது கதை எழுதும் நேரத்திற்கு கட்டியம் கூறுபவை. அமரர் சுஜாதாவின் சிஷ்யர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன இவரது எழுத்து நடை. […]

Read more

தமிழர் வரலாறு

தமிழர் வரலாறு (முதல் பகுதி), பி.டி. சீனிவாச அய்யங்கார், தமிழாக்கமும்-திறனாய்வும் புலவர் கா. கோவிந்தன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 416, விலை 250ரூ. கி.பி. 600 வரையிலான தமிழ், தமிழர், தமிழ்நாடு பற்றிய வரலாற்றை விளக்கும் நூல் இது. மூல நூலாசிரியர் சென்னைப் பல்கலைக்கழக இந்திய வரலாற்றுத் துறையில் துணைப் பேராசிரியராக (1928-29) பணியாற்றியபோது, மேற்கொண்ட ஆய்வுப் பணியின் விளைவே இந்த நூல். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்ததுடன், திறனாய்வும் செய்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். ஏனெனில், சங்க இலக்கியங்களின் சிறப்பு, தமிழ், தமிழர்களின் பழம் […]

Read more

த மியூசிக் ஸ்கூல்

த மியூசிக் ஸ்கூல், செழியன், த. மியூசிக் ஸ்கூல் பப்ளிகேஷன்ஸ், சாலி கிராமம், சென்னை, விலை 7000ரூ. திரைப்படங்களில் நடிகர்களோ நடிகைகளோ, தங்கள் இரு கைகளாலும் பியானோவோ, கீ போர்டோ வாசிக்கும்போது, பல சமயம் நாமும் அப்படி ஒரு கணம் வாசிப்பது போன்று சிறு பிரம்மை, நம்மில் பலருக்கு தோன்றி மறையும். அந்த இசையின் நாதமும் உணர்ச்சி வெளிப்பாடுகளும் அப்படி எண்ணவைக்கும். அந்த எண்ணத்தை நனவாக்கித் தர வந்திருக்கிறது தி மியூசிக் ஸ்கூலின் இந்த பத்து புத்தகங்கள். இசை உங்கள் வாழ்வில் என்னென்ன மாயங்கள் […]

Read more

மதுரை அரசி

மதுரை அரசி, இளங்கோ, இகம் இல்லம், பக். 158, விலை 57ரூ. அங்கம் ஒன்றுக்கு நான்கு காட்சிகளாக நான்கு அங்கங்களைக் கொண்ட மதுரை அரசி என்னும் இப்புதுக்கவிதை நாடக நூல். கி.பி. 1812ல் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ரோஸ் பீட்டர் வாழ்வில் நடந்த வரலாற்று உண்மையை மையப்படுத்தி தடாதகை என்ற மதுரை மீனாட்சியின் வரலாற்றை முழுமையாக விவரிக்கிறது. பல்வேறு புராணச் செய்திகள் உடன் மாலிக்காப்பூர் படையெடுப்பு, குமாரகம்பணனின் மதுரை வருகை, மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் அரங்கேற்றம் போன்ற பல்வேறு வரலாற்றுச் செய்திகள் […]

Read more

தமிழ் சிறுகதைக் களஞ்சியம்(1900-2010)

தமிழ் சிறுகதைக் களஞ்சியம்(1900-2010), தமிழ்மகன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 288, விலை 120ரூ. சிறுகதையின் எல்லை வளர்ந்துகொண்டே வருகிறது. பலரும் பலவிதமாக எழுதுகின்றனர். அந்த வானவில்லின் வர்ண ஜாலங்களை இதில் காணலாம். ஒவ்வொரு கதையும் ஒரு ரகம், ஒரு நிறம், ஒரு மணம். பாரதியார், வ.வே.சு. ஐயர், அ. மாதவையா, புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, சுஜாதா, ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. சிறுகதையின் சாரத்தையும் விளக்கி, அதன் சிறப்பையும் சொல்லிச் செல்கிறார் […]

Read more

தமிழ் நாட்டில் கொத்தடிமைகள்

தமிழ் நாட்டில் கொத்தடிமைகள், திருமலை. செல்வகோமதி, சோக்கோ அறக்கட்டளை, பக். 16+320, விலை 150ரூ. தமிழகத்தில் கொத்தடிமைகள் என்று நூலுக்குத் தலைப்பு அமைந்திருப்பினும், உலக அளவில் பல நாடுகளிலும் உள்ள கொத்தடிமைகள் பற்றி விரிவாக இதில் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவில் பல லட்சம் மக்கள் கொத்தடிமைகளாக உள்ளனர் என்று ஆதாரங்களுடன் எழுதியுள்ளனர். செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள், கல்குவாரிகள் முதலிய இடங்களில் கொத்தடிமைகளைக் காண முடிகிறது. கொத்தடிமைகள் இல்லாமல் இருக்க சட்டங்கள் இயற்றப்பட்டும், அடிமை வாழ்க்கை தொடர்கதையாகவே உள்ளது. 1997 முதல் இன்று வரை அச்சமூட்டும் […]

Read more

நெடுஞ்சாலை விளக்குகள்

நெடுஞ்சாலை விளக்குகள், ப.க.பொன்னுசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். ஆராய்ச்சிக் கூடத்தில் உலவும் அறிவுலகவாசிகளான ஆனந்த மூர்த்தி, மனினாடி, ரங்கநாதன் ஆகிய மூவரைச் சுற்றி அமைக்கப்பட்ட இந்த நாவல், ஆராய்ச்சிப் படிப்பு கால அனுபவம், அந்தக் காலத்தின் அரசியல், சமூக நிகழ்வுகளைக் கொண்டு நடைபயில்கிறது. அறிவுலக மனிதர்களின் வேடங்கள், முகமூடிகள் களையப்பட்டு சில நிஜங்களை வாசகர்களின் பார்வைக்கு வைத்துள்ளார் நூலாசிரியர். கல்விப் பிரிவில் ஆழ்ந்த அனுபவமும், மிக உயர்ந்த பதவிகளில் இருந்து பெறப்பட்ட பட்டறிவும் ப.க. பொன்னுசாமியை ஒரு சிறந்த நாவலாசிரியராக இந்த படைப்பு […]

Read more

அனுபவச் சுருள்

அனுபவச் சுருள், டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன், கவிதா பப்ளிகேஷன்ஸ், தி.நகர், சென்னை, பக். 192, விலை 125ரூ. ஒரு வங்கி அதிகாரியின் அரசியல் அனுபவங்கள், இலக்கிய ரசனை, நனவோட்ட முறையிலான நிகழ்ச்சித் தொகுப்புகள். பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் எழுச்சி, மொழி பெயர்ப்பு அனுபவம், ஜெயகாந்தன், சி. சுப்ரமணியன், ராஜாஜி போன்றோர்களுடனான நேர்காணல், ஆங்காங்கே தலை தூக்கும் பாரதியின் கவிதை வரிகள் இப்படியே சுவாரஸ்யமாக 192 பக்கங்கள். எந்தத் தலைப்பை எடுத்துப் படித்தாலும் அதில் ஒரு ஆழ்ந்த கருத்தும், யதார்த்தமும் இழையோட அமைந்த அனுபவம். என்னைக் […]

Read more
1 692 693 694 695 696 841