அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முக்கியக் குறிப்புகள்

அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முக்கியக் குறிப்புகள், சசிமதன், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 17, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-141-8.html உண்பது, உறங்குவது, இனப்பெருக்கம் செய்வது என்பது மற்ற உயிரினங்களுக்கான வாழ்க்கை நியதி. ஆனால் மனித வாழ்க்கை அவற்றையும் கடந்து, அறிவார்ந்த நிலையில் சிந்தித்து, திட்டமிட்டு வாழ்வதாகும். அதற்கு நிறைய கஷ்டங்களையும், பிரச்னைகளையும் மனிதன், தன் வாழ்நாளில் சந்திக்க வேண்டியுள்ளது. அதில் வெற்றி பெற்றவனே சிறந்த வாழ்க்கையை அடைந்தவனாவான். அதற்கு […]

Read more

கைம்மண்

கைம்மண், சுதாகர் கத்தக், பார்வை பதிவுகள், 27/53, சின்னக்கண்ணா நகர், சாமி செட்டிப்பாளையம், வடக்கு, ஜோதிபுரம் அஞ்சல், கோயம்புத்தூர், விலை 150ரூ. உறுதியான கொள்கையுடன், சீரிய கலாசாரத் தளத்தில், விலை போகாதவனாக, சமூகத்தைத் தன் படைப்புகள் மூலம் விமர்சிப்பவனாக இருக்க வேண்டும் தலித் படைப்பாளி. சீமான்களுக்கும் சீமாட்டிகளுக்கும் உவப்பானது இல்லை தலித் இலக்கியம். தமிழ்ச் சூழலில், தான் சுதந்திரமாக இருக்கிறோம் என்று படைப்பாளி நினைக்கும்போதே கைதுசெய்யப்பட்டுவிடுகிறான். கைதானதை எதிர்த்துக் குரல் எழுப்புப்போதே குரல்வளை நெறிக்கப்படுகிறது. கோபத்தை வெளிப்படுத்தும்போதே கண்கள் பிடுங்கப்படுகின்றன. இந்த நிலையில் இருந்து […]

Read more

செள்ளு

செள்ளு, செல்வராஜ், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 96, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-712-7.html கடல் பற்றி நமக்குத் தெரிந்த அளவுக்குக்கூட கடலோர மக்களின் வாழ்வு பற்றி தெரிவதில்லை. இந்த நிலையில், கடலோர மக்களின் வாழ்வைத் தழுவி நெய்தல் நிலத்து இலக்கியமாக வந்திருப்பதுதான் செல்வராஜின் செள்ளு சிறுகதைத் தொகுப்பு. தென்தமிழகத்தில் குமரி மாவட்டத்தின் அரபிக் கடலோரத்தில் வாழும் பாரம்பரிய மீனவச் சமூகமாக முக்குவர்களின் வாழ்வை, அவர்களின் காதலை, துன்பத்தை, நொய்மையை, தேடலை, […]

Read more

மலரும் நினைவுகளில் மக்கள் தலைவர்

மலரும் நினைவுகளில் மக்கள் தலைவர், கே. இளந்தீபன், கவிதா வெளியீடு, 8/55, மேற்கு சாலைத் தெரு, சுந்தரப் பெருமாள் கோவில், கும்பகோணம் 614208, பக். 104, விலை 100ரூ. மக்கள் தலைவர் மூப்பனார் பற்றிய நினைவுகளின் தொகுப்பு நூல். மூப்பனார் மறைந்ததும் கலைஞர், ஜெயலலிதா, வைகோ உள்ளிட்ட தமிழக தலைவர்கள், ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், உள்ளிட்ட இந்தியத் தலைவர்கள், வாலி, வைரமுத்து உள்ளிட்ட கவிஞர்கள் இன்னும் கட்சி பேதமின்றி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி அன்பர்களிடமும் மூப்பனார் பற்றிய மேலான நினைவுகளை நூல் […]

Read more

வாரம் ஒரு பாசுரம்

வாரம் ஒரு பாசுரம், சுஜாதா, கிழக்கு பதிப்பகம், விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-960-6.html சுஜாதா, அம்பலம் மின்னிதழிலும் கல்கி வார இதழிலும் எழுதிய பாசுர அறிமுகங்களின் தொகுப்பு இந்த நூல். தமிழ் அழகும் பக்தி ரசமும் சொட்டும் அழகிய பாசுரங்களுக்கு நவீன பாணியில், மொழியில் உரை எழுதியுள்ள சுஜாதா, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள பல அரிய தமிழ்ச் சொற்களையும் அறிமுகப்படுத்துகிறார். அவருக்கு விருப்பமான பாசுரங்களை எடுத்துக்கொண்டு அதன் இலக்கிய தன்மையை மையப்படுத்தி, ஆழ்வார்களின் பக்திப் பெருக்கை உயர்த்திப் பிடித்து, […]

Read more

வம்புக்கு நான் அடிமை

வம்புக்கு நான் அடிமை, ஜே.எஸ். ராகவன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை 4, பக். 200, விலை 90ரூ. நகைச்சுவை உணர்வு நமது மன இறுக்கங்களைத் தளர்த்தும் ஆற்றல் மிக்கது. கடுமையான விஷயங்களையும் கூட நகைச்சுவையுடன் கூறினால், அதில் தொடர்புள்ளவர்களே தன்னை மறந்து சிரித்துவிடுவர். எந்த ஒரு நிகழ்வையும் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு கடந்துவிட்டால், மனவேதனையிலிருந்து தப்ப முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். நகைச்சுவையை மட்டுமே மூலப்பொருளாகக் கொண்டு இந்நூலை எழுதி இருக்கிறார் ஜே.எஸ். ராகவன். சுமார் 40 ஆண்டுகளாக பத்திரிகைகளில் கட்டுரை எழுதிவரும் நூலாசிரியர், சென்னையில் […]

Read more

கொங்குவேளாளர் குல வரலாறு

கொங்குவேளாளர் குல வரலாறு, முதல்பாகம், புலவர் செ. ராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு 638011, பக். 330, விலை 350ரூ. தமிழகத்தின் ஐந்து பகுதிகளுள் ஒன்றான கொங்கு நாட்டில் உழவைத் தொழிலாகக் கொண்ட வேளாண் மக்கள் கொங்கு வேளாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பிற வேளாளர் சமூகத்தினரிடமிருந்து தனி அடையாளமாகக் கொங்கு என்ற அடைமொழி சேர்த்து அழைக்கின்றனர். அந்த மக்களின் உட்பிரிவான குலங்கள் குறித்த வரலாற்றைக் கூறும் நூல் இது. கூட்டம் கூட்டமாகக் குடியேறிய காரணத்தாலும், பண்டைக் கால சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டமாக வாழ்ந்தாலும் […]

Read more

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-136-1.html பன்னிரு ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் உரையுடன் வெளிவந்துள்ளது. உரை எழுதிய முனைவர் த.கோவிந்தன் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் எளிமையாக எழுதியுள்ளார். 4 ஆயிரம் பாடல்களும் 2 புத்தகங்களாக வெளிவந்துள்ளன. மொத்தம் 2, 164 பக்கங்கள். இரண்டு பக்கங்களும் சேர்த்து விலை 850ரூ. பாக்களையும், அழகிய கட்டமைப்பையும் காணும்போது விலை […]

Read more

கல்வெட்டுக்கலை

கல்வெட்டுக்கலை, பொ. ராசேந்திரன், சொ. சாந்தலிங்கம், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம், மதுரை, பக். 240, விலை 250ரூ. இனம், மொழி, பண்பாட்டின் ஆணிவேர்களை அலசி ஆராய உதவுபவை இலக்கியங்களும் கல்வெட்டுகளும், நாட்டின் வரலாற்றை எழுதுவதிலும் அவை முக்கியப் பங்காற்றுகின்றன. அவற்றில் கல்வெட்டுகள், கால ஓட்டத்தில் தேய்ந்துபோனாலும் உள்ளதை உள்ளபடி சொல்பவை. இலக்கிய வளர்ச்சியை அறிந்துகொள்ள கல்வெட்டுகள் உதவுவதால், கல்வெட்டு கற்பது ஒரு கலையாகவே போற்றப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் வளர்ந்துவரும் துறையாக கல்வெட்டியல் மாறியுள்ளது. அதைக் கற்போரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அந்த […]

Read more

கற்றது கடலளவு

கற்றது கடலளவு, து. கணேசன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 396, விலை 115ரூ. சாண்டில்யனின் கடல்புறா நாவல், அந்தக் கால கடற்பயணத்தை விவரித்தால், அதற்கு சற்றும் சுவை குன்றாமல், நவீன கால கடற்பயணத்தை தொழில் அனுபவமாகவும், வாழ்க்கை அனுபவமாகவும் விவரிக்கிறது இந்தப் புத்தகம். கப்பல்களில் வேலை செய்வோர் நிறைய சம்பளம் வாங்குவதாக நினைப்போம். இதைப் படித்தால் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். அவர்கள் இழக்கும் வாழ்க்கை எது? கடல் விபத்து, மனைவி மக்களைப் பிரிந்திருந்தால், விலை மாதர்களிடம் உடல் நலத்தை […]

Read more
1 756 757 758 759 760 841