சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், பாலசர்மா, டி.எஸ்.புத்தக மாளிகை, 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 100ரூ. ராஜாஜி என்ற அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் வாழ்க்கை வரலாறு. வாழ்க்கையில் தூய்மையும், நேர்மையும் முக்கியமானவை என்று கருதி, அதன்படியே நடந்தவர் ராஜாஜி. சொந்த வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் அப்பழுக்கின்றி வாழ்ந்து, வரலாற்றில் நிலைபெற்றவர். அவரது குணநலன்கள், சாதனைகள், அறிவுரைகள் என்று திரட்டித் தரப்பட்டுள்ளது. இந்நூலைப் படிக்கும்போது எப்பேர்ப்பட்ட தலைவர்களை நாம் பெற்றிருந்திருக்கிறோம் என்று பெருமை ஏற்படுவது உண்மை.   —-   […]

Read more

தாய்மை

தாய்மை, டாக்டர் ஜெயம் கண்ணன், கர்ப்ப ரக்ஷாம்பிகை மகப்பேறு மையம், யுனைடெட் இந்தியா காலனி, 4, ஆறாவது குறுக்குத்தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 300ரூ. தாய்மை என்ற அற்புதமான அனுபவத்தை அடைந்த கணத்தில்தான் ஒரு பெண் முழுமை அடைகிறாள். அதனால்தான் தாய்மை அனுபவத்திற்கு நிகராகச் சொல்வதற்கு இந்த உலகின் வேறு எதுவுமே இல்லை என சொல்லப்படுகிறது. கருமுட்டை தயாராகும் முதல் வாரம் தொடங்கி 40 வாரங்களில் ஒரு சிசு படிப்படியாக அடையும் மாற்றங்களையும் நிகழ்வுகளையும் குழந்தைக்கு எப்போது இதயம் துடிக்கத் தொடங்குகிறது? எப்போது […]

Read more

பூர்வீக பூமி

பூர்வீக பூமி, சூர்யகாந்தன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை 14, பக். 154, விலை 80ரூ. வானம் பார்த்த பூமியில் குடியானவர்களுக்கும், ஆடுமாடுகளும் படும்பாட்டை மானாவாரி மனிதர்கள் என்ற படைப்பாக தந்தவரின் அடுத்த அனுபவம்தான் பூர்வீகபூமி. உழைக்க சளைக்காத சிறுசிறு விவசாயிகள், தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் தங்கள் விவசாயத்தையும் தொழிலையும் விட்டுவிட்டு, அண்டை மாநிலமான கர்நாடகாவில் வீணாய்ப்போகும் நிலங்களை விளைநிலமாக மாற்றும் பொருட்டு அங்கே குடிபோகிறார்கள். பாடுபட்டவர்கள் பலனை அனுபவிக்கும் முன்பே காவிரிப் பிரச்னை பூதாகரமாகி, தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் […]

Read more

கம்ப இராமாயணம்-ஓர் அறிமுகம்

கம்ப இராமாயணம்-ஓர் அறிமுகம், பேராசிரியர்-அ.ச. ஞானசம்பந்தன், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை 40, பக். 352, விலை 150ரூ. கம்ப ராமாயணத்தை புதிய பார்வையில் ஆய்வு நோக்கில் அலசி ஆராய்ந்தவர் அ.ச. ஞானசம்பந்தன். கோவை கம்பன் அறநிலை வெளியிட்ட கம்பராமாயண நூல்களுக்கு ஆறு காண்டங்களுக்கும், அ.ச. ஞானசம்பந்தன் எழுதிய முன்னுரைகளை தனி நூலாக்கி, கம்பராமாயணத்தை முழுமையாக அறிந்து கொள்ள உதவியிருக்கிறார்கள். பாலகாண்டம் தொடங்கி யுத்த காண்டம் முடிய இன்னும் ஆராய வேண்டிய பகுதிகளைப் பற்றி ஆசிரியர் எடுத்துச் […]

Read more

நாம் பிரிந்துவிட வேண்டாம்

நாம் பிரிந்துவிட வேண்டாம், டாக்டர் யூசுப் அல்கர்ளாவி, தமிழில்-பேராசிரியர் கே.எம். இல்யாஜ் ரியாஜி, வேர்கள் பதிப்பகம், 52/1, மண்ணடி தெரு, சென்னை 600001, பக். 292, விலை 175ரூ. ஒற்றுமை என்ற கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று வெற்றிக்கு வழி கூறும் மார்க்கம், இஸ்லாம். அது இன்று சில கருத்து வேறுபாடுகளால் பல பிரிவுகளாகப் பிரிந்து நின்று செயல்படுகிறது என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தும் இந்நூலாசிரியர், இம்மார்க்கத்தின் மீது உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள், பிரிவினையை உருவாக்கும் கருத்து மோதல்களைக் கைவிட்டு ஒருங்கிணைந்து செயல்பட […]

Read more

தூக்கிலிடுபவரின் குறிப்புகள்

தூக்கிலிடுபவரின் குறிப்புகள், சசி வாரியார், தமிழில்-இரா. முருகவேள், உன்னதம், ஆலந்தூர் அஞ்சல், கவுந்தப்பாடி 638366, ஈரோடு மாவட்டம், விலை 140ரூ. இந்தியாவில் வேறெப்போதையும் விட தூக்குதண்டனைக்கு ஆதரவான குரல்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. மக்கள் கொடூரமான குற்றங்களை எதிர்கொள்ளும் ஒவ்வொரு சமயத்திலும் மரண தண்டனைதான் ஒரே தீர்வு என்று கூக்குரலிடுவதைக் கேட்கிறோம். ஆனால் அவர்கள் மரணதண்டனை என்றால் என்னவென்று புரிந்துகொண்டிருக்கிறார்களா என்பது சந்தேகம். திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் 117 பேரை தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றும் தொழிலாளியாகப் பணிபுரிந்த ஜனார்த்தனன் பிள்ளையின் வாக்குமூலத்தை சசி வாரியர் […]

Read more

இசைத் தமிழும் நாடகத் தமிழும் தோற்றமும் வளர்ச்சியும்

இசைத் தமிழும் நாடகத் தமிழும் தோற்றமும் வளர்ச்சியும், மா.ந. திருஞானசம்பந்தன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 270, விலை 120ரூ. தமிழர்களின் ஐவகை நிலங்களுக்குரிய தெய்வம், உணவு, பறவை, மலர், பண், தொழில் போன்றவற்றை விரிவாகப் பட்டியலிடுவதில் தொடங்கி சங்க காலத்தில் இசைத்தமிழ், சோழர்கள் காலத்தில் தமிழிசை, தமிழிசை வளர பாடுபட்டவர்கள், கூத்துக்கலையின் வகைகள், நாடகக்கலையை வளர்த்தவர்கள், நாடகத்தால் வளர்ந்தவர்கள், நாடக சபாக்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் ஏராளமான தகவல்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. ஆப்ரகாம் பண்டிதர், அண்ணாமலை செட்டியார், பாரதியார், பாரதிதாசன், கண்மணி […]

Read more

அமுதம் பருகுவோம்

அமுதம் பருகுவோம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 128, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-148-9.html இந்து மதத்தின் சிறப்புகளை அழகாக வெளிப்படுத்தும் நூல். தியானம், மனித வாழ்வுக்கு எவ்வளவு அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறது. தனி மனிதனின் உயர்வுக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் தேவையான அறநெறிகளை ராமாயணம், மகாபாரதம், பாகவதம், பகவத்கீதை போன்ற அறநூல்களின் மேற்கோள்களோடு எடுத்துரைக்கும் பயனுள்ள நூல் இது. ஆகம விதிப்படி நிறுவப்படாத சிலைகளினால் மக்களுக்கு நன்மைகள் கிடைக்காது. […]

Read more

புலித்தடம் தேடி

புலித்தடம் தேடி, மகா. தமிழ்ப்பிரபாகரன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-137-9.html மூன்று ஆண்டுகளுக்கு முன் மரண ஓலத்தில் இருந்த ஈழத்தில் இன்று மயான அமைதி. பயங்கரவாதிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் தமிழ் மக்களைக் கொன்று குவித்த கொடூரப் போர் அது. கொத்துக் குண்டுகளுக்கு பலியானோர் போக மிச்சம் இருப்பவர்களை, பட்டினி போட்டும் பணியவைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கவைக்கும் இனவெறித் தந்திரம் மட்டுமே அங்கு செய்யப்படுகிறது. ஐக்கிய நாடுகள் […]

Read more

கம்பன் அன்றும் இன்றும்

கம்பன் அன்றும் இன்றும், பேராசிரியர் கு. ராமமூர்த்தி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 304, விலை 230ரூ- நூலாசிரியர், பேராசிரியர் கு. ராமமூர்த்தி கம்ப ராமாயணத்தை நன்கு கற்றுணர்ந்து, அதில் ஆழ்ந்த புலமை பெற்றவர் என்பதை இந்நூல் வெளிப்படுத்துகிறது. இராவணனுடைய மகனான மேகநாதன் என்ற இந்திரஜித்தின் வீரத்தை, இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனியின் போர்த் தளபதியாகத் திகழ்ந்த ஜெனரல் ரோமலின், வீர வாழ்வோடு ஒப்பிட்டுக் காட்டியுள்ள முறை, வியக்க வைக்கிறது. ராமன் நல்ல தலைவன் என்ற பகுதியில், ராமனிடம் எல்லா வகை நற்பண்புகளும் குடி கொண்டுள்ளன […]

Read more
1 4 5 6 7 8 11