ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்

ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும், விவேகானந்தன் இனியன் சம்பத், கல்பனாதாசன், இனியன் சம்பத் பதிப்பகம்,  விலை 659ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-806-0.html சிறந்த சிந்தனையாளரான சம்பத், ஈ,வெ,ரா. குடும்ப வாரிசு. அத்துடன் தி.மு.க. வளரும் காலத்தில் அண்ணாதுரையின் வலது கரமாக இருந்தவர். தி.மு.கவில் சிந்தனையாளர் என்ற முத்திரையுடன் கருத்துக்களை எடுத்துச் சொல்லி இளைஞர்களை ஈர்க்கும் சக்தியாக இருந்தவர். பாராளுமன்றத்தில், தமிழக வளர்ச்க்காக குரல் கொடுத்தவர். திராவிட நாடு சாத்தியமில்லை என்று அண்ணாதுரையிடம் வாதிட்டவர். கிடாக்காதுன்னு தெரிஞச பிறகு அது […]

Read more

சுவடிகள் வழங்கிய கவிதைகள்

சுவடிகள் வழங்கிய கவிதைகள், கோ. வேணுகோபாலன், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 18, விலை 85ரூ. பண்டைய தமிழ் புலவர்கள் கவிஞர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பாக இந்த நூல் இருக்கிறது. பாடல்களுடன் இணைந்த கவிதைகளின் சொல்லாட்சி, இலக்கிய நயம் போன்றவை தமிழுக்கும் அதை படைத்தவர்களுக்கும் பெருமை சேர்ப்பதை நூல் முழுவதும் காண முடிகிறது. ஒவ்வொரு கவிதையுடனும் அது தோன்றிய சூழல் மற்றும் அதன் பொருள், கவிதையை ஆக்கியவர் பற்றிய குறிப்புகளை கொடுத்து இருப்பது சிறப்பு. பல நூல்களை வாங்கி படித்தபயனை […]

Read more

சீறா வசன காவியம்

சீறா வசன காவியம், முரளி அரூபன், கல்தச்சன் பதிப்பகம், 21, மேயர் சிட்டிபாபு தெரு, சென்னை 5, பக்கங்கள் 1328, விலை 850ரூ. கடந்த 1850இல் வாழ்ந்த காயல்பட்டினம், கண்ணகுமது மகுதூமும்மது புலவர் நபிகள் பெருமானின் வரலாற்றை வசன காவியமாக மிகவும் விரிவாக எழுதியுள்ளார். 300 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவில் உமறு புலவர், சீறாப்புராணம் இயற்றினார். இதைப் புலவர்களே படித்து அறிய முடியும் என்பதால், பலரும் அறியவேண்டி எளிய உரைநடை வடிவில், இந்த நூலை எழுதியுள்ளார். 125 ஆண்டுகளுக்குப் பின், அரிய பெரிய […]

Read more

பாரதியார் கதைக் களஞ்சியம்

பாரதியார் கதைக் களஞ்சியம், தொகுப்பு – டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி. நகர், சென்னை -35, பக்கங்கள் 816 விலை 350ரூ. ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-810-8.html பாரதியார் படைத்த ஐம்பத்தொன்பது கதைகளையும் ஒரே நூலில் தொகுத்து தந்துள்ளார் டாக்டர் நல்லி குப்புசாமி. சந்திரிகையின் கதை என்னும் நாவல், நவதந்திர கதைகள் என்னும் தொகுப்பு முதலாக, எல்லாக் கதை படைப்புகளையும் தொகுத்திருப்பதோடு, அவர் எழுதிய ஆங்கிலக் கதையையும் இணைத்திருப்பது நூலாசிரியரின் தொகுப்புக்கு முத்தாய்ப்பு வைக்கிறது. […]

Read more

இராமாயணத் தூமணிகள்

இராமாயணத் தூமணிகள், ஆ. கிருஷ்ணன், வானதி பதிப்பகம், 233, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை – 17, பக்கங்கள் – 1016, விலை 495ரூ. ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-810-7.htm இந்நூலாசிரியர் ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூரில் மேனேஜிங் டைரக்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2002 -ல் இவர் ஆங்கிலத்தில் வெளியிட்ட ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் என்கிற பக்தி ததும்பும் நூல் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது தமிழில் வெளியாகியுள்ள இராமாயணத் தூமணிகள் என்ற இந்நூல் சற்று வித்தியாசமானது. தூமணிகள் என்பதற்கு தூய மணிகள் […]

Read more

ஜெயம் மகாபாரதம் ஒரு மறுபார்வை

ஜெயம் மகாபாரதம் ஒரு மறுபார்வை, தேவ்தத் பட்நாயக், தமிழில்-சாருகேசி. விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, பக்கம் 496, விலை 160 ரூ. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-810-6.html பெண் ஆசையின் விளைவு ராமாயணம் என்றால், மண் ஆசையின் விளைவு மகாபாரதம் என்பர். இவை இரண்டும் இந்தியாவின் இரு இதிகாசங்களாகப் போற்றப்படுகின்றன. JAYA AN ILLUSTRATED RETELLING OF MAHABHARATA என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமாக இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலில், வழக்கமான மகாபாரதக் கதையுடன், தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வாய் வழியாக உலவும், மகாபாரதக் […]

Read more

சாதிக்க ஆசைப்படு

சாதிக்க ஆசைப்படு, முனைவர் செ. சைலேந்திரபாபு, ஐ,பி.எஸ், தமிழில் முனைவர் அ. கோவிந்தராஜு பி.ஆர்.டி, சுரா பதிப்பகம், பக்கம் 240, விலை 150 ரூ. மானிடர் வாழ்வில் சிறந்த நண்பன் நூல்களே என்று பெரியோர் கூறுவர், ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தில், அவர் முன்னேற வழிகாட்டுவது பெற்றோர், ஆசிரியர்கள், மட்டுமன்று. நல்ல நூல்களே என்று துணிந்து கூறலாம். இந்நூல் அந்தவகையில் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் பயனுள்ள நூல் ஆகும். நூலாசிரியர், வெறும் உபதேசங்களை மட்டும் கூறாமல், தக்க எடுத்துக் காட்டுகளையும் தந்து நூலை எழுதிச் செல்வது, நூலை […]

Read more

திருவகுப்பு, வேல், மயில், சேவல், விருத்தங்கள், திருஎழுகூற்றிருக்கை

திருவகுப்பு, வேல், மயில், சேவல், விருத்தங்கள், திருஎழுகூற்றிருக்கை, தெளிவுரை ம. ராமகிருஷ்ணன், திருப்புகழ்ச் சங்கமம் வெளியீடு, சென்னை 90, பக்கம் 232, விலை 120 ரூ. முனைவர் ம. ராமகிருஷ்ணன், திருப்புகழ் நெறி பரவுதற்கென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஆன்மிகப் பணியில் தற்போது முழுமையாக ஈடுபட்டுள்ள இவர், ‘வரிசைதரும் பதம் அதுபாடி வளமொடு செந்தமிழ் உரைசெய அன்பரும் மகிழ வரங்களும் அருள்வாயே’ என்னும் அருணகிரிநாரின் வரத்தைப் பெற்றவர். ஒரே பொருளை பலவிதமாக வகுத்தும், தொகுத்தும், சொல்லும் நூல் வகைக்கு வகுப்பு என்று பெயர். இதில் சீர்பாத […]

Read more

திருப்பட்டூர் அற்புதங்கள்

திருப்பட்டூர் அற்புதங்கள்,வி. ராம்ஜி, விகடன் பிரசுரம், விலை 95ரூ. To buy this tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-809-7.html திருப்பட்டூர் வரும் அடியவர்களுக்கு வாழ்க்கை வசதிசெய்து தருவதை சிறப்பாகச் சொல்கிறது இந்த நூல். ஒரு தத்துவ விஷயத்தை எளிதாக விளக்க, ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது. பிரம்மாவில் ஆரம்பித்து வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் என்று பலரும் திருப்பட்டூர் வந்ததையும், அவர்கள் பெற்ற அனுபவத்தையும் மிக நேர்த்தியான நெசவாக பின்னப்பட்டுள்ளது. பிரம்மாவுக்கு இத்தனைப் பெரிய உருவமா, முழுவதும் மஞ்சளா? என்று பிரம்மாவை வணங்குவதை சுவைபட விவரிக்கிறது […]

Read more

உள்ளதைச் சொல்கிறேன்

உள்ளதைச் சொல்கிறேன்,மதுரை தங்கம், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 65ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-809-9.html புகழ்பெற்ற பத்திரிகையாளரான மதுரை தங்கம், திரை உலகில் 37 ஆண்டு காலம் அனுபவம் உடையவர், சிவாஜிகணேசன், கமல், ரஜினிகாந்த், கே. பாலசந்தர், இளையராஜா, கே. பாக்யராஜ் உள்பட திரை உலக நட்சத்திரங்களுடன் நெருங்கிப் பழகியவர். குறிப்பாக, ரஜினிகாந்த் திரை உலகுக்கு வந்த புதிதில், அவரை முதன் முதலாகப் பேட்டி கண்டவர். நட்சத்திரங்கள் பற்றி இவர் கூறும் தகவல்கள் ஆச்சரியமானவை. […]

Read more
1 123 124 125 126 127 128