பொதுதமிழ் (மாதிரி வினா விடைகள்)

பொதுதமிழ் (மாதிரி வினா விடைகள்), சி.கலை சின்னத்துரை, விகடன் பிரசுரம், சென்னை 2, பக்கங்கள் 248, விலை 150ரூ உங்கள் தமிழ் அறிவை பட்டை தீட்டும் களம், என்றும் பாடத்திட்ட அடிப்படையில் தொகுக்கப்பட்ட துல்லியப் பதிவு என்றும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2,4, யு.பி.எஸ்,சி.டி.இ.டி., வி.எ.ஓ, போட்டித் தேர்வுகளுக்கான அடிப்படைக் கருவூலம் என்றும் நூலின் அட்டையில் குறிப்பு உள்ளதால் உள்ளே இருக்கும் விவரங்கள் எவையென்பது சொல்லமலேயே விளங்கும். இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் இளைஞர்களுக்கு சவாலாக இருப்பது போட்டித் தேர்வுகள்தாம். என்னதான் பொது அறிவை வளர்த்துக் கொள்ள […]

Read more

இருளர்கள்

இருளர்கள், குணசேகரன், கிழக்கு பதிப்பகம், பக்கம்:128. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8368-808-6.html இந்திய பழங்குடி இனங்களில் அவர்களுக்கொன்று ஒரு தனி இடம் இருக்கிறது. பிறரது நிலங்களில் பணியாற்ற மாட்டார்கள். யாருக்காகவும், எதற்காகவும், தங்கள் தன்மானத்தை விட்டு கொடுக்க மாட்டார்கள். பணம் மீதும் பொருள் மீதும் பெரிய நாட்டமில்லை. பெண்களை கொண்டாடி, போற்றும் மரபு அவர்களுடையது. இசை மீது தீராத மோகம், சிறிதளவே இருந்தாலும், கிடைப்பதை பகிர்ந்து உண்ணும் பண்பு, அசாதாரண இறை பக்தி, கூர்மையான அறிவாற்றல், கொடிய விலங்குகளை […]

Read more

குமரகுருபரரின் தமிழ் உள்ளம்

குமரகுருபரரின் தமிழ் உள்ளம், ந. முருகேசன், ஓலைச்சுவடித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 613010, பக்கங்கள் 94, விலை 80ரூ குமரகுருபரரின் தமிழ்ப்பற்று அளவிடற்கரியது. அருந்தமிழ், செழுந்ததமிழ்த் தெள்ளமுது, சொற்களை பழுத்த தொகைத்தமிழ், புத்தமுதம் வழிந்தொழுகும் தீந்தமிழ், இசை முத்தமிழ் என்றெல்லாம் அகங்குளிரப்பாடி 17ஆம் நூற்றாண்டில் தமிழை உச்சாணிக் கொம்புக்கு ஏற்றியவர். பக்தி மணமும் பைந்தமிழ் மணமும் கமழும் நூலாக இது திகழ்கிறது. இவ்வாறு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ம. திருமலை வழங்கியுள்ள அணிந்துரை இந்நூலுக்கு அணி சேர்த்துள்ளதை வழிமொழிந்தே ஆகவேண்டும். குமரகுருபரரின் தமிழ் […]

Read more

திருமந்திர நெறி

திருமந்திர நெறி, ஜி. வரதராஜன், பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக்கங்கள் 176, விலை 75ரூ நெறி என்றால் சமயக் கொள்கைக்காகவோ, தனிமனித ஒழுக்கத்துக்காகவோ ஏற்படுத்தப்பட்ட விதி அல்லது முறை எனப்படும். திருமூலர் தாம் அருளிய திருமந்திரம் வாயிலாக இத்தகைய வழிமுறைகளை அருளிச் செய்துள்ளார். பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக உள்ளது திருமூலரின் திருமந்திரம்- திருமூலர் அருளிச்செய்த திருமந்திரம் தோத்திர நூலாகவும் சாத்திர நூலாகவும் திகழ்கிறது. எல்லா சமயங்களும் மதங்களும் இறைவனை அடைவதற்குரிய வழியாக அன்பையே வலியுறுத்திக் […]

Read more

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை, பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார் பேட்டை, சென்னை 18, விலை 40ரூ To buy this Tamil book onnline – www.nhm.in/shop/978-81-8493-625-4.html உலகையே மலைக்க வைத்த ஊழல். தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.விற்கு பெரும் அதிர்ச்சி தோல்விக்குக் காரணமாக இருந்த ஊழல். இதையும் மிஞ்சி ஒரு ஊழல் உலகில் இனி நடக்க வாய்ப்பில்லை என்று கருதப்படும் ஊழல்… என்று பல ஆச்சரியங்களையும் அதிர்ச்சிகளையும் உள்ளடக்கிய ஊழல். ஸ்பெக்ட்ரம் ஊழல், சுமார் ஒண்ணே முக்கால் லட்சம் […]

Read more

முத்திரை நினைவுகள்

முத்திரை நினைவுகள், ஜே. எம். சாலி, இலக்கிய வீதி, சென்னை 101, பக்கங்கள் 144, விலை 120ரூ எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜே.எம். சாலி தனது எழுத்துலக அனுபவங்களை இந்நூலில் எழுதியுள்ளார். 1955இல் கண்ணன் சிறுவர் இதழுக்கு எழுத ஆரம்பித்த அவர், அதற்குப் பின்பு தமிழகத்தின் பிரபல இதழ்கள் எல்லாவற்றிலும் எழுதிவிட்டார் என்பது நம்மை வியக்க வைக்கிறது. பிரபல பத்திகையாளர்களான சாவி, இதயம் பேசுகிறது, மணியன், கல்கி ராஜேந்திரன் உட்பட பல பத்திகையாளர்களுடன் நூலாசிரியருக்கு இருந்த தொடர்புகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனந்தவிகடன், சிங்கப்பூர் தமிழ் […]

Read more

சமர்ப்பணம்

சமர்ப்பணம், யோகி ராம்சுரத்குமார் வாழ்க்கை வரலாறும் போதனைகளும், ஆர்,கே. ஆழ்வார், யோகிராம் சுரத்குமார் டிரஸ்ட், திருவண்ணாமலை, பக்கங்கள் 236, விலை 80ரூ. திருவண்ணாமலைக்கு பல சிறப்புகள் உண்டு. சேஷாத்ரி சுவாமிகள், பகவான் ரமண மகரிஷி போன்ற மகான்கள் வாழ்ந்த பூமி. இந்த நகரின் ஆன்மிக சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் விசிறி சாமியார் என அன்பர்களால் நேசிக்கப்பட்ட யோகிராம் சுரத்குமாரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தன்னை ஒரு பிச்சைக்காரன் என்று சொல்லிக் கொள்வது இவர் வழக்கம். இவருடைய ஒரு பார்வைக்கும், நல்லாசிக்கும் பலர் […]

Read more

இவ்வுலக இன்பமா? அவ்வுலக வீடுபேறா?

இவ்வுலக இன்பமா? அவ்வுலக வீடுபேறா?, திருக்குறள் ஆய்வுச் செம்மல் ஆ.ரத்தினம், கலைக்கோ வெளியீடு, தமிழ்குடில், 3/404ஏ, 13வது தெரு, ராம்நகர் தெற்கு, மடிப்பாக்கம், சென்னை 91, பக்கங்கள் 246, விலை 125ரூ. எல்லா பொருளையும் தன்னகத்தே கொண்டு மக்களுக்கு நல்வழி காட்டும் திருக்குறள், மனிதராற்றுப்படை என திகழ்கின்றனது. திருக்குறள் ஆய்வுநூல்கள் நான்கினை வெளியிட்டுள்ள ஆசிரியர் ஆ. ரத்தினத்தின் ஐந்தாவது நுல் இது. திருக்குறள் உரைகள், ஆய்வு நூல்கள் பலவற்றை ஒப்புநோக்கி ஆய்வுசெய்து இந்நூலினை எழுதியுள்ளார். அறம், பொருள், இன்பம் பற்றி பாடியுள்ள வள்ளுவர் பெருமாள், […]

Read more

ஸ்ரீவைஷ்ணவம்

ஸ்ரீவைஷ்ணவம், வேணு சீனுவாசன், கிழக்கு பதிப்பகம், விலை ரூ 200. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-425-0.html திருமண் காப்பிடுவதற்கு விரல்களை மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமாம். அதிலும்கூட நடுவிரலையும் நகத்தையும் பயன்படுத்தக் கூடாதாம். ஸ்ரீ சூர்ணத்தைச் சுமங்கலிப் பெண்கள், கன்னிப் பெண்கள், கைம்பெண்கள் ஆகியோரும் தரித்துக் கொள்ள வேண்டும். கன்னிப் பெண்கள் பூசணி விதை வடிவிலும், சுமங்கலிப் பெண்கள் மூங்கில் இலையைப் போலவும், கைம்பெண்கள் எள்ளின் வடிவத்திலும் ஸ்ரீ சூர்ணம் தரிக்க வேண்டுமாம். கருவுற்ற பெண்ணுக்கு சீமந்தம் என்று ஒரு சடங்கு […]

Read more

ஸ்ரீ கருட புராணம்

ஸ்ரீ கருட புராணம், ஆர். குருப்ரஸாத், அம்மன் சத்தியநாதன், ஏஏபி அருள்மிகு அம்மன் பதிப்பகம், சென்னை5, பக்கங்கள் 176, விலை 90ரூ. ஸ்ரீமன் நாராயணரிடம் ஸ்ரீ கருடன் கேட்ட கேள்விகளும் அதற்கு ஸ்ரீமன் நாராயணர் அளித்த பதில்களுமே கருட புராணமாக உருவாகிது. உயிர்கள் ஏன் பிறக்கின்றன? எத்தகைய புண்ணியம் செய்தால் ஜென்பம் நீங்கும்? துன்பங்களுக்கு என்ன காரணம்? மனிதனின் இறப்புக்குப் பின் நடப்பவை எவை? கோ தானம் செய்வதற்கான விதிமுறைகள் யாவை? குருவை ஏன் மதிக்க வேண்டும்? ஸ்ராத்தத்தின் வகைகள் யாவை? ஸ்ராத்தத்தில் செய்ய […]

Read more
1 121 122 123 124 125 128