விஸ்வரூபம்

விஸ்வரூபம், இரா. முருகன், கிழக்கு பதிப்பகம், 57 பி.எம்.ஜி. காம்பிளெக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தியாகராய நகர், சென்னை 17, விலை 400ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-749-7.html ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசும் வசனங்களையும் அதே நேரத்தில் அவர்களது ஆழ் மனதில் வெளிவராமல் அமுங்கிக் கிடக்கும் விகல்பமான எண்ணங்களையும் ஒரே நேரத்தில் கூறி கதை சொல்லி இருப்பது பாராட்டும்படியாக இருக்கிறது. அதுவே கதையின் வேகமான ஓட்டத்திற்கு காரணியாகவும் அமைந்து விடுகிறது. கதையின் காலமான 1860ல் தொடங்கி 1940 வரை நெடுகிலும் […]

Read more

நானும் என் எழுத்தும்

நானும் என் எழுத்தும், சுந்தர ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம், பக். 199, விலை 150ரூ. தமிழின முன்னோடி எழுத்தாளர்களில், எல்லோராலும் அன்புடனம், பாசத்துடனும் சு,ரா, என அழைக்கப்படுவர் சந்தர ராமசாமி. இலக்கியம், நவீனத்துவ இலக்கியம், சிறுகதை, புதினம், கட்டுரை என, பல சிந்தனைக் களங்களில் கால் பதித்த பெருமகனார், பன்மொழி வித்தகர், பல விருதுகளுக்கு உறவுக்காரர். அவரது 42 ஆண்டு கால படைப்புகள் பற்றிய பதிவுகள், கட்டுரைகள், என்னுரைகள், கேள்வி-பதில், நாட்குறிப்புகள் என, பல வகைகளில் தொகுத்து வெளியிட்டுள்ளனர் காலச்சுவடு பதிப்பகம். தமிழ் இலக்கியம் […]

Read more

மறவர் சரித்திரம்

மறவர் சரித்திரம், வீ. ச. குழந்தை வேலுச்சாமி, முல்லை நிலையம், 9, பாரதிநகர், முதல்தெரு, தி.நகர், சென்னை 17, விலை 60ரூ. தமிழகத்தின் பழமை குடி மக்கள் என்று கூறப்படும் மறவர்கள் வாழ்ந்து வந்த பகுதிகள், நாயக்கர் அரசாட்சியில் தென்நாட்டு பகுதிகளில் மன்னவர்களாய் மறவர்கள் இருந்த பெருமைகள் உள்ளிட்ட மறவர்கள் பற்றிய பல தகவல்களை இந்நூல். நன்றி: தினத்தந்தி, 22/5/13   —-   மண்ணை அளந்தவர்கள், பழ. கோமதி நாயகம், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை […]

Read more

தினமணி தீபாவளி மலர் 2012

தினமணி தீபாவளி மலர் 2012, விலை 100ரூ. வீணை சிட்டிபாபுவின் கச்சேரி ஒன்றைக் கேட்ட ரிக்க்ஷாத் தொழிலாளி ஒருவர், கச்சேரி முடிந்தவுடன் இரண்டு ஒரு ரூபாய் நோட்டுகளை அன்பளிப்பாகத் தந்தாராம். ஐயா தினமும் நான் அஞ்சு, ஆறு ரூபாய் சம்பாதிப்பேன். சம்பாக்கிறதில் பாதிக்குக் குடிச்சுருவேன். நீங்க வாசிக்கறதைப் பார்த்துட்டு இருந்துட்டன். குடிக்கணும்னே தோணலை… என்றும் சொன்னாராம். இந்த அருமையான நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார் சுந்தர் சி. பாபு, அன்புள்ள அப்பா என்னும் தலைப்பில் பாவேந்தர், கருமுத்து தியாகராயர், பி.ஆர். பந்துலு, நடிகர் ஜெய்சங்கர், அகிலன் […]

Read more

ஒன்றே உலகம்

ஒன்றே உலகம், தனிநாயக அடிகள், தமிழ்ப் பேராயம், திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், பக். 264, விலை 170ரூ. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய தனிநாயக அடிகளாரின் சுற்றுப் பயணத்தில் கிடைத்த அரிய தகவல்களை எழுத்து வடிவில் கொண்டு வந்த நூலே ஒன்றே உலகம். இலங்கையில் பிறந்த அடிகளார் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு தமிழ் குறித்து சொற்பொழிவுகளை நடத்தி தமிழின் இனிமையை உலகறியச் செய்துள்ளார். கிழக்கு ஜெர்மனியின் டாக்டர் லேமன் சீர்காழியில் ஏழாண்டுகள் தங்கி தமிழ் ஆராய்ச்சி மேற்கொண்டது. திருக்குறளையும், […]

Read more

பாவேந்தம்(25 தொகுதிகள்)

பாவேந்தம்(25 தொகுதிகள்), தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 17, விலை 6800ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-014-1.html பாரதிக்கு சீனி.விசுவநாதனைப் போல், பாரதிதாசனுக்கு கோ. இளவழகன்- தான் எழுதிய மொத்தக் கவிதைகளையும் தாங்கள் வாழ்ந்த காலத்திலேயே அழகிய புத்தகமாக பார்க்க ஆசைப்பட்டனர் பாரதியும், பாரதிதாசனும். பாரதியின் கனவைச் சில ஆண்டுகளுக்கு முன் சீனி.விசுவநாதன் நிறைவேற்றினார். பாரதிதாசனின் விருப்பம் இப்போதுதான் நிறைவேறியுள்ளது. தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும். என்றவர் பாரதிதாசன். அப்படிப்பட்ட […]

Read more

திருமகள் தேடி வந்தாள்

திருமகள் தேடி வந்தாள், லட்சுமி பிரபா, திருமகள் நிலையம், சென்னை 17, பக். 280, விலை 125ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0001-020-5.html பிரபல மாத நாவல்களில் வெளிவந்த இரு கதைகளைத் தாங்கியுள்ளது இந்நாவல். சுவைபட கதைக் களத்தை நகர்த்தியுள்ளதால் வாசிப்பது அலாதி மகிழ்வைத் தருகிறது. இப்புத்தகத்தில் திருமகள் தேடி வந்தாள், மாயக்கண்கள் என இரு நாவல்கள். முதல் நாவலான திருமகள் தேடி வந்தாள் யதார்த்தமான குடும்பக் கதை. கதைப்படி வசதி படைத்த இளம் பெண் சஹானாவைக் காதலிக்கும் இளைஞன் […]

Read more

மௌனியின் மறுபக்கம்

மௌனியின் மறுபக்கம், ஜே.வி. நாதன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-837-1.html தமிழ்ச் சிறுகதை உலகின் முன்னோடியும், சிறுகதைத் திருமூலர் என்று போற்றப்படுபவருமான மௌனியைப் பற்றிய முக்கிய ஆவணம். வெறும் 24 சிறுகதைகள் மட்டுமே எழுதி, உலகின் சிறந்த சிறுகதையாளர்கள் வரிசையில் இடம்பிடித்தவர் மௌனி. மரபு சார்ந்த சிறுகதை இலக்கியத்தின் பாதையைத் தகர்த்து புதுத்தடம் போட்டவர். 16 ஆண்டுகாலம் மௌனியோடு பழகி அவரின் அன்பைப் பெற்ற பத்திரிகையாளர் […]

Read more

ஸ்ரீமகாவிஷ்ணு மகாத்மியம்

ஸ்ரீமகாவிஷ்ணு மகாத்மியம், உமா பாலகுமார், அருண் பதிப்பகம், எண் 107/8, கௌடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 396, விலை 175ரூ. 33 தலைப்புகளில் மகாவிஷ்ணு குறித்த கதைகளின் தொகுப்பு. மகாவிஷ்ணு, லட்சுமி, பூ தேவி, நீளா தேவி கதைகளுடன் துவங்குகிறது. மகாவிஷ்ணுவிடம் இருந்து பிரம்ம தேவர் தோன்றியது. கலைமகள் கதை என விரிந்து அனந்த பத்மநாப சுவாமி, திருப்பதி மலையப்ப சுவாமி, உப்பிலியப்பன், அரங்கநாதர், சுந்தராஜப் பெருமாள் என பெருமாள்களின் கதைகளுடன் செல்கிறது. ஆதிசேஷன், கருடாழ்வான், அனுமன் ஆகியோரின் கதைகளுடன் […]

Read more

தி.க.சி. நேர்காணல்கள்

தி.க.சி. நேர்காணல்கள், தொகுப்பாசிரியர்-வே. முத்துக்குமார், உயிர் எழுத்து பதிப்பகம், திருச்சி-4, பக். 188, விலை 140ரூ. தி.க.சி.யின் 25 நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு கால வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 75 ஆண்டு கால முற்போக்கு கலை, இலக்கிய வரலாற்றையும், விமர்சனப் போக்குகளையும் புரிந்து கொள்ள முடிகிறது. தி.க.சி.யின் விமர்சனங்கள், நேர்மையைப் பிரதிபலிப்பவையாக இருப்பவை. இத்தொகுப்பிலுள்ள நேர்காணல்களில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகளும், அவருடைய நேர்மைக்குச் சாட்சியமாக நிற்கின்றன. புதிய மனிதனுக்காக-புதிய வாழ்க்கைக்காக-புதிய கலாசாரத்துக்காக, கலை, இலக்கியம் படைக்கப்பட வேண்டும் என்பதே என் நோக்கம். அந்த இலக்கியம் சமூக நலனுக்கும், […]

Read more
1 56 57 58 59 60 63