கவிஞர் வாணிதாசனின் புலமை

கவிஞர் வாணிதாசனின் புலமை, தமிழ் ஐயா வெளியீட்டகம், தஞ்சாவூர் மாவட்டம், விலை 500ரூ. திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் சார்பில் கவிதைத் தமிழ் 12வது ஆய்வு மாநாடும், கவிஞர் வாணிதாசனின் நூற்றாண்டு விழாவும் மதுரையில் நடந்தது. இந்த மாநாட்டு கருத்தரங்கு கட்டுரைகளைத் தொகுத்து, கவிஞர் வாணிதாசன் புலமையும் தமிழ் கவிஞர்களின் தனித்தன்மையும் என்ற தலைப்பில் புத்தகம் வெளியாகியுள்ளது. இதில் கவிஞர் வாணிதாசனின் கவிதை நயம் பற்றி பல்வேறு தலைப்புளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் கவிஞர்கள் பாரதிதாசன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், சுரதா […]

Read more

உளவுத்துறை உலகை உற்றுப் பார்க்கும் கண்கள்

உளவுத்துறை உலகை உற்றுப் பார்க்கும் கண்கள், குன்றில் குமார், குறிஞ்சி பதிப்பகம், சென்னை, விலை 115ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-295-7.html உலக அளவில் பிரபலமாக விளங்கும் சில உளவுத் துறைகளின் செயல்பாடுகளைப் பற்றி இந்நூல் விவரிக்கிறது. ஒரு நாடு பாதுகாப்புடன் இருக்க, தனக்கு எதிரிகள் யாரும் இருக்கிறார்களா? இருந்தால் அவர்களின் பலம், பலவீனம் என்ன? அவர்களை வீழ்த்த என்னென்ன வழிகள் உள்ளன என்பன போன்ற பல விவரங்களை, எதிரியின் இருப்பிடங்களுக்கே சென்று வேவு பார்த்து அறிவதுதான் அந்நாட்டின் உளவுத் […]

Read more

அங்கீகாரம்

அங்கீகாரம், கலைமாமணி பி.ஆர். துரை, சந்திரிகா பதிப்பகம், சென்னை, பக். 240, விலை 150ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-274-7.html ஒண்ணாம் வகுப்பு மட்டுமே படித்த சினிமா மற்றும் நாடகக் கலைஞரான துரை, தன் 55 ஆண்டுகால கலையுலக அனுபவங்களை வாழ்க்கை வரலாறாக வடித்திருக்கிறார். மேடை நாடகம், திரைப்படம், டி.வி. நாடகம், டப்பிங் தொடர், வானொலி நாடகம், கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் என்று பல்வேறு பரிமாணங்களில் அவர் ஆற்றிய பணிகள் பிரமிப்பு. மோட்டார் சுந்தரம் பிள்ளை, புது […]

Read more

வாலி 100

வாலி 100, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம், சென்னை, பக். 212, விலை 130ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-8.html தலைமுறைகளைக் கடந்தும் ஜெயித்த திரையுலக ஜாம்பவான் வாலி பற்றிய 100 சுவையான செய்திகளின் தொகுப்பு. இவை செய்திகளல்ல. ஒவ்வொன்றும் ஒரு பதிவு. அடுத்த தலைமுறையினருக்கு வாலி பற்றிய ஒரு பாடம். வாலியின் துணிவு, நன்றி உணர்வு, நட்பு, நகைச்சுவை, எளிமை, ஈகோ இல்லாத மனம், யாருக்கும் தலைவணங்கா மாண்பு, தீராத தேடல், அவரது பட்டறிவு என்ற வாலியைச் சுற்றி […]

Read more

ஆங்கிலேயர் இல்லாத இந்தியா

ஆங்கிலேயர் இல்லாத இந்தியா, பிரெஞ்சு மொழியில் பிரயர் லோட்டி, தமிழில் சி.எஸ். வெங்கடேசன், சந்தியா பதிப்பகம். மதுரை மீனாட்சி அம்மனின் நகைகள் எத்தனை பிரான்சு நாட்டைச் சேர்ந்த, பிரயர் லோட்டி என்ற யாத்திரீகர், பிரஞ்சு மொழியில் எழுதி, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள, ஆங்கிலேயர் இல்லாத இந்தியா என்ற பயண நூலை சமீபத்தில் படித்தேன். சி.எஸ். வெங்கடேசன் மொழிபெயர்த்துள்ள இந்நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கடந்த 1899ல் இலங்கை அனுராதபுரத்தில் துவங்கி, காசி வரை பயணம் செய்து, இந்த பயண நூலை, லோட்டி எழுதியுள்ளார். இந்தியா தொடர்பாக, […]

Read more

வாலி 100

வாலி 100, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம், பக். 102, விலை 130ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-8.html வாலியின் அறியப்படாத முகம் திரைப்பட பாடல்களை, வெறும் பாடல் என்று கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், தமிழ் திரைப்பாடலின் மொழி, ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பதை அறியும் அரிய பொக்கிஷமாகவே பார்க்க வேண்டும். தமிழ் திரைப்பாடல் வரலாற்றில், கவிஞர் வாலிக்கென தனித்த இடம் உண்டு. மூன்று தலைமுறை கதாநாயகர்களுக்கும் திரைப்பாடல் எழுதியதால், அவரின் தமிழ் தலைமுறை கடந்தும் பாராட்டப்படுகிறது. […]

Read more

நாளைய பொழுது உன்னோடு

நாளைய பொழுது உன்னோடு, ஜனகன், கங்கை புத்தக நிலையம், பக். 180, விலை 90ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-348-9.html எழுத்தாளர் சூடாமணி, தன் தாயார் ஸ்ரீரங்கநாயகி பெயரில் நிறுவியுள்ள நாவல் திட்டத்தில் பங்குபெற்று, பரிசு பெற்ற நாவல் இது. ஜனகனின் கை, எழுதி எழுதிப் பழகிய கை. வரிக்கு வரி, ஜனகனின் முத்திரை பளிச்சிடுகிறது. நாவலின் கட்டுமானத்தில் குறுக்கும், நெடுக்குமாக ஆன்மீக இழைகள் ஓடுவது தனிச்சிறப்பு. ஓம், சகஸ்ரநாமம் ஆகியவற்றின் மேன்மையையும், ஆசிரியர் விளக்குகிறார். ஓம் என்ற வார்த்தையைப் […]

Read more

ஆழ்வார்கள் யாவர்

ஆழ்வார்கள் யாவர், வேங்கடகிருஷ்ணன், ஆர்.என்.ஆர்.அச்சகம், பக். 159, விலை 100ரூ. ஆழ்வார்களில் தமிழ் தலைவன் யார் மாயோன் மேய காடுறை உலகம் என்று தொல்காப்பியர் காலம் முதல் போற்றப்பட்ட வைணவ சமயம், ஆழ்வார்களின் பாசுரங்கள் வாயிலாக வளர்க்கப்பட்டு, ராமானுஜரால் பாரத நாட்டின் பல பகுதிகளிலும் புகழ் பரப்பி திகழ்கிறது. பக்திப் பயிர் வளர்க்க பன்னிரு ஆழ்வார்களின் சில பாசுர நயங்களையும், அவர்களின் பெருமைகளையும் விளக்குவதே இந்நூல். இந்நூலில் 16 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொன்றும் நல்ல முத்தாக இருப்பதால், நூலும் பதினாறும் பெற்ற முத்து மாலையாகத் […]

Read more

திருமால் தரிசனம்

திருமால் தரிசனம், வேணு சீனிவாசன், வையவி பதிப்பகம், பக். 176, விலை 100ரூ, நாலாயிர திவ்ய பிரபந்தம், அதன் உரையாசிரியர்களின் நயம் குறித்தும், உரையாசிரியர்களின் உயர்வு குறித்தும், 18 கட்டுரைகளில், இந்த நூல் பழகு தமிழில் விவரிக்கிறது. பாலும் கண்ட சர்க்கரையும் குடிக்கப் பித்தம் தன்னடையே போமாபோல, பகவதனு பவம் பண்ண நெருப்பில் இட்ட பஞ்சுக்குவியலைப் போல தீவினைகளுடன் உருமாய்ந்து போகும் என்ற ஈட்டின் விளக்கம் கூறுவது (பக். 39). இறை அறிவு தலைதுக்கி மலரும்போது, இந்த உலக அறிவு கூம்ப ஆரம்பித்துவிடும் என்று […]

Read more

விடியலை நோக்கி முடிவற்ற பயணம்

விடியலை நோக்கி முடிவற்ற பயணம், த.ஜெ.பிரவு, ஜெ. அனிதா பிரபு, சென்னை, விலை 250ரூ. லட்சியங்களின் தோல்வி இயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை எழுதியுள்ளது த.ஜெ.பிரபுவின் நாவல் இது. நாவலின் கதைக்களமும் அந்தத் துறைதான். ஆறு அங்கங்களாக எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல், 1980களுக்கு உயிர்கொடுத்திருக்கிறது. எண்பதுகளில் தமிழகத்தில் தொழிற்சங்க அரசியல் தீவிரமாக இரந்த காலகட்டத்தில் அதுசார்ந்த தொழிலாளர்களின் நடவடிக்கைகள், நிர்வாகங்களின் எதிர்வினைகள் போன்றவற்றைத் துல்லியமாகப் பதிவுசெய்துள்ளார் ஆசிரியர். அரசியல் சார்ந்த லட்சியக் கனவுகளைச் சிதறடிக்கும் யதார்த்தத்தை இந்தப் படைப்பின் வழியாக விரிவாகப் பேசுகிறார் த.ஜெ.பிரபு. […]

Read more
1 642 643 644 645 646 841