தமிழ் நாட்டில் கொத்தடிமைகள்

தமிழ் நாட்டில் கொத்தடிமைகள், திருமலை. செல்வகோமதி, சோக்கோ அறக்கட்டளை, பக். 16+320, விலை 150ரூ. தமிழகத்தில் கொத்தடிமைகள் என்று நூலுக்குத் தலைப்பு அமைந்திருப்பினும், உலக அளவில் பல நாடுகளிலும் உள்ள கொத்தடிமைகள் பற்றி விரிவாக இதில் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவில் பல லட்சம் மக்கள் கொத்தடிமைகளாக உள்ளனர் என்று ஆதாரங்களுடன் எழுதியுள்ளனர். செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள், கல்குவாரிகள் முதலிய இடங்களில் கொத்தடிமைகளைக் காண முடிகிறது. கொத்தடிமைகள் இல்லாமல் இருக்க சட்டங்கள் இயற்றப்பட்டும், அடிமை வாழ்க்கை தொடர்கதையாகவே உள்ளது. 1997 முதல் இன்று வரை அச்சமூட்டும் […]

Read more

தமிழ் சிறுகதைக் களஞ்சியம்(1900-2010)

தமிழ் சிறுகதைக் களஞ்சியம்(1900-2010), தமிழ்மகன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 288, விலை 120ரூ. சிறுகதையின் எல்லை வளர்ந்துகொண்டே வருகிறது. பலரும் பலவிதமாக எழுதுகின்றனர். அந்த வானவில்லின் வர்ண ஜாலங்களை இதில் காணலாம். ஒவ்வொரு கதையும் ஒரு ரகம், ஒரு நிறம், ஒரு மணம். பாரதியார், வ.வே.சு. ஐயர், அ. மாதவையா, புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, சுஜாதா, ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. சிறுகதையின் சாரத்தையும் விளக்கி, அதன் சிறப்பையும் சொல்லிச் செல்கிறார் […]

Read more

மதுரை அரசி

மதுரை அரசி, இளங்கோ, இகம் இல்லம், பக். 158, விலை 57ரூ. அங்கம் ஒன்றுக்கு நான்கு காட்சிகளாக நான்கு அங்கங்களைக் கொண்ட மதுரை அரசி என்னும் இப்புதுக்கவிதை நாடக நூல். கி.பி. 1812ல் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ரோஸ் பீட்டர் வாழ்வில் நடந்த வரலாற்று உண்மையை மையப்படுத்தி தடாதகை என்ற மதுரை மீனாட்சியின் வரலாற்றை முழுமையாக விவரிக்கிறது. பல்வேறு புராணச் செய்திகள் உடன் மாலிக்காப்பூர் படையெடுப்பு, குமாரகம்பணனின் மதுரை வருகை, மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் அரங்கேற்றம் போன்ற பல்வேறு வரலாற்றுச் செய்திகள் […]

Read more

நெடுஞ்சாலை விளக்குகள்

நெடுஞ்சாலை விளக்குகள், ப.க.பொன்னுசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். ஆராய்ச்சிக் கூடத்தில் உலவும் அறிவுலகவாசிகளான ஆனந்த மூர்த்தி, மனினாடி, ரங்கநாதன் ஆகிய மூவரைச் சுற்றி அமைக்கப்பட்ட இந்த நாவல், ஆராய்ச்சிப் படிப்பு கால அனுபவம், அந்தக் காலத்தின் அரசியல், சமூக நிகழ்வுகளைக் கொண்டு நடைபயில்கிறது. அறிவுலக மனிதர்களின் வேடங்கள், முகமூடிகள் களையப்பட்டு சில நிஜங்களை வாசகர்களின் பார்வைக்கு வைத்துள்ளார் நூலாசிரியர். கல்விப் பிரிவில் ஆழ்ந்த அனுபவமும், மிக உயர்ந்த பதவிகளில் இருந்து பெறப்பட்ட பட்டறிவும் ப.க. பொன்னுசாமியை ஒரு சிறந்த நாவலாசிரியராக இந்த படைப்பு […]

Read more

அனுபவச் சுருள்

அனுபவச் சுருள், டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன், கவிதா பப்ளிகேஷன்ஸ், தி.நகர், சென்னை, பக். 192, விலை 125ரூ. ஒரு வங்கி அதிகாரியின் அரசியல் அனுபவங்கள், இலக்கிய ரசனை, நனவோட்ட முறையிலான நிகழ்ச்சித் தொகுப்புகள். பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் எழுச்சி, மொழி பெயர்ப்பு அனுபவம், ஜெயகாந்தன், சி. சுப்ரமணியன், ராஜாஜி போன்றோர்களுடனான நேர்காணல், ஆங்காங்கே தலை தூக்கும் பாரதியின் கவிதை வரிகள் இப்படியே சுவாரஸ்யமாக 192 பக்கங்கள். எந்தத் தலைப்பை எடுத்துப் படித்தாலும் அதில் ஒரு ஆழ்ந்த கருத்தும், யதார்த்தமும் இழையோட அமைந்த அனுபவம். என்னைக் […]

Read more

நெஞ்சமெல்லாம் நீ

நெஞ்சமெல்லாம் நீ, சோம. வள்ளியப்பன், ஆப்பிள் பப்ளிஷிங், சென்னை, விலை 140ரூ. எழுத்தாளர் சோம. வள்ளியப்பன் எழுதிய 24 சிறுகதைகள் கொண்ட நூல். கதைகள் ஏற்கனவே பிரபலமான பத்திரிக்கைகளில் பிரசுரமானவை. எனவே இலக்கிய அங்கீகாரம் பெற்ற சிறந்த கதைகள் என்பதை சொல்லத் தேவையில்லை. நன்றி: தினத்தந்தி, 26/3/2014.   —- வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப், செ.திவான், விகடன் பிரசுரம், 757, அண்ணாசலை, சென்னை 2, விலை 160ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-181-6.html அவுரங்க என்ற சொல்லுக்கு அரசு சிம்மாசனம் […]

Read more

கந்தர் அந்தாதி

கந்தர் அந்தாதி, அருணகிரிநாதர், மும்பை ராமகிருஷ்ணன், எல்.கே.எம். பப்ளிகேஷன், பக். 544, விலை 290ரூ. செந்தமிழ் முருகன் கந்தவேலின் புகழ் பாடும் நூல்களும் கந்தர் அந்தாதியும் ஒன்று. மகாபாரத்திற்கு உரை எழுதிய வில்லிப்புத்தூராழ்வாருக்கும், அருட்கவி அருணகிரிக்கும் இடையே ஏற்பட்ட கவிதைப் போட்டியின் விளைவாகப் பாடப்பட்ட நூல் கந்தரந்தாதி. அருணகிரியால் திருச்செந்தூர் செந்திலாண்டவனின் புகழ்பாடும் நூல் கந்தரந்தாதி. கந்தரந்தாதியைப் பாராதே கழுக்குன்ற மலைய நினையாதே என்று ஒரு பழமொழீ உள்ளது. அந்த அளவுக்கு பாடுவதற்கு மிகக் கடினமான நூல். படிப்பதற்கோ நெட்டுருச் செய்வதற்கோ, பொருள் காண்பதற்கோ […]

Read more

தமிழ் அறிவோம்

தமிழ் அறிவோம், கவிக்கோ ஞானச்செல்வன், மணிவாசகர் பதிப்பகம், பக். 160, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-848-1.html தமிழ்மொழியின் தனித்தன்மை, அழகு, மேன்மை சிதையாமல் காக்கப்பட வேண்டும் என்பதில் கருத்தாக நின்று பணிகள் ஆற்றும் கவிக்கோ ஞானச்செல்வன் எழுதிய நூல் இது. தன்னேரிலாத தமிழ் எனத் தொடங்கி, இருந்தமிழே உன்னால் இருந்தேன் என முடியும் 32 கட்டுரைகளைக் கொண்ட இந்நூலின் பிற்சேர்க்கையாகத் தமிழ் எழுதும்போதும், பேசும்போதும் ஏற்படக்கூடிய ஐயங்களுக்கு விடையும் விளக்கமும் தரப்பட்டுள்ளது. பிறமொழிக் கலப்பு எவ்வாறு தமிழ் […]

Read more

மறைமலைஅடிகள் வரலாறு

மறைமலைஅடிகள் வரலாறு, மறை. திருநாவுக்கரசு, மறைமலை அடிகள் பதிப்பகம், பக். 784, விலை 600ரூ. தனித் தமிழ்ப் போராளி, சீர்திருத்த சைவத்தை நிலைநாட்டிய உழைப்பாளி மறைமலை அடிகளாரின் நீண்ட வரலாற்று நூல். ஆழ்ந்த சைவப் பற்று, வடமொழி ஆற்றல், ஆங்கிலப் புலமை பெற்ற மறைமலை அடிகளார் 1876 முதல் 1950 வரை 74 ஆண்டுகள், தமிழையும், சைவத்தையும் எவ்வாறெல்லாம் முன்னெடுத்துச் சென்றார் என்பதை அவரது மகனார் மறை. திருநாவுக்கரசு இந்த நூலில் சுவைபட எழுதியுள்ளார். இவரது மகனார் மறை. தி. தாயுமானவன், 54 ஆண்டுகளுக்குப் […]

Read more

நரேந்திர மோடி நேர்மையும் நிர்வாகத் திறமையும்

நரேந்திர மோடி நேர்மையும் நிர்வாகத் திறமையும், சந்திரமவுலி, அல்லயன்ஸ் கம்பெனி, பக். 168, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-209-2.html வடக்கு குஜராத்திலும் வாடுநகர் என்ற சிற்றூரில் மளிகைக்கடை ஒன்றை நடத்தி வந்த மகன்லால் ரான் சோத்தாஸ் என்பவருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் நரேந்திர தாமோ தர்தாஸ் என்னும் நரேந்திர மோடி. இளமைக் கல்வி முடிந்து கல்லூரியில் சேர்ந்து, ஒரு ஆண்டிற்குள் உண்மையான ஞான ஆனந்தத்தை தேடிப் புறப்பட்டவர். 1972 வாக்கில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் […]

Read more
1 195 196 197 198 199 240