மருத நிலமும் பட்டாம்பூச்சிகளும்

மருத நிலமும் பட்டாம்பூச்சிகளும், சோலை சுந்தரபெருமாள், முற்றம், சென்னை – 14, பக்கம் 296, விலை 150 ரூ. நூலாசிரியரின் கருத்தரங்க உரைகள், இதழ்களில் வெளிவந்த அவருடைய கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்பு இந்நூல். வண்டல் நிலப்பகுதியின் குறிப்பாக தஞ்சை மாவட்ட மக்களின் வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகள், தஞ்சை மண்ணின் சாதியப் பண்பாடு, உணவு, பழக்க வழக்கங்கள், வழிபாடு ஆகிய எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அம்மண்ணில் வளம்பெற்றிருந்த நிலவுடைமைச் சமூக அமைப்பே இருந்தது என்பதைச் சொல்லும் நூல். தஞ்சை மாவட்ட எழுத்தாளர்களின் சிறப்பான […]

Read more

காற்றின் கையெழுத்து

காற்றின் கையெழுத்து, பழநிபாரதி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 130ரூ. ஒரு பத்திரிகை நின்று போனது குறித்து எழுதும்போது… எழுத்தாளர் சுஜாதா, ‘நிகழ் காலத்தைப் பிரதிபலிக்காத எதுவும் நிலைக்காது’ என்று சொன்னார். பத்திரிகைகளுக்கு மட்டுமல்ல… படைப்பாளிக்கும் அது பொருந்தும். சினிமா பாடலாசிரியராக இருந்தாலும் பழநிபாரதிக்குள் இருக்கும் ‘சமூகன்’ கொடுக்கும் சாட்டையடிகள்தான் இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள். வளரும் நாடுகளை உய்விக்க வந்ததாகச் சொல்லப்படும் உலகமயமாக்கல், பாரம்பரியத்தை நசுக்கி அன்னிய நாட்டிடம் கையேந்தி நிற்கும் நிலை ஆகியவற்றைக் காட்டுவதாகவே இந்த தொகுப்பின் […]

Read more

வாழ்புலம் இழந்த துயரம்

வாழ்புலம் இழந்த துயரம் சாளரம் வெளியீடு 2.1758, சாரதி நகர், என்ஃபீல்டு அவென்யு மடிப்பாக்கம் சென்னை 600091 செப்டம்பர் 11 இரட்டைக்கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு இந்த உலகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுவிட்டது. அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்காவின் எதிரிகள் என்பதுதான் அந்தப் பிரிவினை. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் இரண்டு பெரும் யுத்தங்களை நடத்தி, பல்லாயிரக்கணக்கான மக்களை அமெரிக்கா படுகொலை செய்தது மட்டுமல்ல, உலகெங்கும் சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் கடுமையாக ஒடுக்கப்படுவதற்கான சூழலையும் அது உருவாக்கியது. இந்த நூலில் உள்ள கட்டுரைகள் கடந்த பத்தாண்டுகளில் இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா […]

Read more

எதிர்ச்சொல்

எதிர்ச்சொல், பாரதி தம்பி, புலம், சென்னை 14, பக்கங்கள் 120, விலை 70ரூ. “உண்மையான போராட்டம் என்பது தன்னிலிருந்தே தொடங்குகிறது. தன் சொந்த முரண்பாடுகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக் கொண்டு ஒரு இக்கட்டுக்கு வரும்போது மனம் போராட்டத்தை நிகழ்த்துகிறது. … சமூக அநீதிகளுக்கு எதிரான ஒரு போராளி இவ்விதம் தன்னிலிருந்துதான் உருவாக முடியும் … நமது சமூக அமைப்பில் போராடிக் கொண்டிருப்பது ஒன்றுதான் நேர்மையாக வாழ்வதற்கான வழி. அமைதியாக வாழ்வது என்றால் அனைத்தையும் சகித்துக் கொண்டு அடிமையாக வாழ்வது என்று அர்த்தம்.” மேற்கண்ட வார்த்தைகளுடன்தான் […]

Read more
1 82 83 84