அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்

அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள், லதா ரஜினிகாந்த், பூம்புகார் பதிப்பகம், சென்னை 108, பக். 224, விலை 270ரூ. ஒரு மனிதனின் வாழ்வுக்கு அடித்தளமாக அமைவது அவனுடைய குழந்தைப் பருவமே. அத்தகைய குழந்தைப் பருவத்திலுள்ள சின்னஞ்சிறு மனிதர்களிடம் நாம் எப்படிப் பழக வேண்டும்? அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? அவர்களுக்கு சிறந்த கல்வியையும் ஒழுக்கத்தையும் பயிற்றுவிப்பது எப்படி? அவர்களின் வளர்ச்சிக்கு நாம் உறுதுணையாக இருப்பது எப்படி? என்பன போன்ற பல விஷயங்களை எளிமையாகவும் தெளிவாகவும் இந்நூலில் விளக்கியுள்ளார் ஆசிரியர். குழந்தைகளிடம் அதிகாரத்தைவிட அன்பையும், கண்டிப்பைவிட கவனிப்பையும், கடுமையைவிட […]

Read more

நெஞ்சில் ஒளிரும் சுடர்

நெஞ்சில் ஒளிரும் சுடர், கமலா ராமசாமி, காலச்சுவடு. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-188-1.html தமிழ் இலக்கிய சூழலில் செல்லம்மா பாரதியின் நூலுக்கு பிறகு, இலக்கியவாதியான கணவரை பற்றி மனைவி எழுதிய நூல், அனேகமாக இந்த நூலாகதான் இருக்க முடியும் என தோன்றுகிறது. வாசகர்களுக்கு சு.ரா. ஓர் எழுத்தாளர், ஓர் ஆளுமை, நண்பர்களுக்கு மதிப்பிற்குரிய மனிதர் என்ற பல தோற்றங்களையும், உருவங்களையும் தாண்டி, கணவர் என்ற தகுதியில் அவருக்கு மட்டுமே, தெரிந்த சு.ரா.வை இதில் காணலாம். தன் கணவர் மீது பேரன்பையும், […]

Read more

சிவமூர்த்திகள் 64

சிவமூர்த்திகள் 64, தெள்ளாறு ஈ. மணி, சங்கர் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 250ரூ. சிவபெருமான் 64 மூர்த்திகளாக தோன்றி அருள் புரிந்த விவரங்கள் அடங்கி உள்ளன. தற்கால உலகிற்கு இந்த 64 மூர்த்திகளும் எதை உணர்த்துகிறார்கள் என்பதை சிறு சிறு சான்றுகள் மூலம் விளக்கப்பட்டுள்ளன.சிவ பக்தர்களுக்கு உதவும் நூல்.   —-   செட்டிநாட்டு சமையல் (101 சைவ அசைவ வகைகள்), ஜே.எஸ். குமாரி, மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், 9, […]

Read more

அவனது நினைவுகள்

அவனது நினைவுகள், யூமா. வாசுகி, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 100ரூ. ஒரு ஓட்டல் வாசலில் எச்சில் இலையை போடும் தொட்டியின் அருகே நாய்களுடன் சேர்ந்து எஞ்சிய சாப்பாட்டை சாப்பிட்டு வருகிறான் ஒரு ஆதரவற்ற சிறுவன். அவனுக்கு பெயரும் இல்லை. பெற்றோர் யார் என்று தெரியாது. சற்று வளர்ந்ததும் ரிக்க்ஷா ஓட்டிப் பிழைக்கும் அவன் ரிக்க்ஷாவில் பயணிக்கும் விபசாரிகளின் அறிமுகம் கிடைப்பதால் புரோக்கராக மாறுகிறான். அப்போது சில வியாபாரிகளின் பழக்கம் கிடைத்ததும் அவர்களுக்காக அடியாளாகவும் […]

Read more

மனிதன்

மனிதன், ஆர். ராமநாதன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 24, கிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை 17, விலை 90ரூ. நாம் பல வரலாறுகளைப் படிக்கிறோம். ஆனால் நமது மனித இன வரலாறு நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அறிவியல் சார்ந்த இந்நூல் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.   —-   தமிழ்ச் சொற்கள் (சொற்பொருள் விளக்கம்), முனைவர் அ. ஜம்புலிங்கம், இந்துமதி பதிப்பகம், 3, லால்பேட்டை தெரு, சிதம்பரம் 608001, விலை 150ரூ. செம்மொழியாம் தமிழ் மொழியில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் […]

Read more

கலீபாக்கள் வரலாறு

கலீபாக்கள் வரலாறு, வி.எம். செயது அகமது, நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராயநகர், சென்னை 17, விலை 75ரூ. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு நல்லாட்சி புரிந்த அபூபக்கர் சித்தீக் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலி(ரலி) ஆகிய கலீபாக்களின் வரலாற்றையும் அவர்களுக்கு இணையாக நல்லாட்சி செய்த உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) வரலாற்றையும் வடக்கு கோட்டையார் வி.எம். செய்யது அகமது எழுதியுள்ளார். இந்த வரலாற்றுத் தொடர் தினத்தந்தி ஆன்மிக மலரில் வெளியாகி லட்சக்கணக்கான வாசகர்களின் […]

Read more

தமிழர் சமுதாயச் சிந்தனைகள்

தமிழர் சமுதாயச் சிந்தனைகள், க.ப. அறவாணன், தமிழ்க்கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை 29, விலை 100ரூ. உலகில் தலை நிமிர்ந்து வாழ்ந்த மனிதன், பின் தங்கிப் போனது ஏன் என்று ஆராய்ந்து, அதுபற்றி நூல்கள் எழுதி வருகிறார் தமிழறிஞர் க.ப. அறவாணன். தமிழர் சமுதாயச் சிந்தனைகள் என்று தலைப்பு கொண்ட இந்த நூலில் தமிழ் மன்னர்கள், தமிழைவிட வட மொழிக்கு அதிக முக்கியம் கொடுத்து, அம்மெழியை வளர்த்தனர் என்று சுட்டிக்காட்டுகிறார். காவிரி ஆறு உற்பத்தி ஆகும் தலைக்காவேரி, முன்பு […]

Read more

முற்பிறவி மறுபிறவி ஆதாரங்கள்

முற்பிறவி மறுபிறவி ஆதாரங்கள், விக்கிரவாண்டி வி. ரவிச்சந்திரன், மேகதூதன் பதிப்பகம், புதிய எண்-13, சின்னப் ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-163-7.html ஆன்மா அழிவற்றது என்பது அனைத்து மதங்களுமே ஏற்றுக் கொண்டுள்ள ஒரு தத்துவம். இதில் முக்தி அடையாமல் மரணிக்கும் மனித ஆன்மா, முக்தி அடையும் வரை, மீண்டும் மீண்டும் மறுபிறவி எடுக்கிறது என்பது ஹிந்து மதக் கொள்கை. புத்த மதமும் இதை ஏற்றுக்கொள்கிறது. இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற சில மதங்கள் […]

Read more

பட்டு

பட்டு, அலெசாண்ட்ரோ பாரிக்கோ, தமிழில்-சுகுமாரன், காலச்சுவடு, 669, கே.பி. சாலை, நாகர்கோவில், பக். 120, விலை 95ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-801-5.html சொல்லாத சொற்களுக்குப் பொருள் அதிகம் என்பதைப் படித்து முடித்ததும் உணரச்செய்கிறது பட்டு மொழிபெயர்ப்பு நாவல். துண்டு துண்டாகத் தாவிச் செல்லும் மொழிபெயர்ப்பு. இறுதியில் கோவையாக நமக்கு ஒரு சித்திரத்தை வழங்குகிறது. 19ம் நூற்றாண்டில் ஒரு பட்டு வியாபாரியின் கடல் கடந்த காதலை மென்மையாக நமக்கு விவரிக்கிறது. பிரான்ஸ் நாட்டு ராணுவத்தில் பணிபுரிந்த பிறகு பட்டுப் புழு […]

Read more

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம், கமலா வி. முகுந்தா, தமிழில்-ராஜேந்திரன், கிழக்குப் பதிப்பகம், 57, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ், சௌத் உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17, பக். 328, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-801-2.html பள்ளிக்கூடங்கள் குழந்தைகளை மனப்பாடம் செய்வதற்கு மட்டுமே நிர்பந்திக்கின்றன. இந்த செயலால், குழந்தைகள் பள்ளிக்கூடம் என்றாலே அலறியடித்து ஓடுகிறார்கள். புத்தகச் சுமை, அளவுக்கு அதிகமான வீட்டுப் பாடங்கள், இடைவிடாத தேர்வுகள் என்று அவர்களை மிரட்டுவதுதான் இன்றைய பள்ளிக்கூடங்களின் செயல்பாடாக உள்ளது. இதனால் மனதளவில் குழந்தைகள் […]

Read more
1 776 777 778 779 780 841