நர பட்சணி

நர பட்சணி, நானக் சிங், தமிழில்-முத்து மீனாட்சி, சாகித்திய அகாதெமி, 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18. இந்திய விடுலையின்போது வாழ்ந்த பொதுவுடமை சிந்தனை கொண்ட இரு இளைஞர்களின் போராட்ட வாழ்க்கையே இந்தப் புதினம். பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்தவர் ஆலை முதலாளி டாகூர் சிங். இவரது மனைவி அமர்கௌர், மகன் பிரீத்பால். இவர்களது பக்கத்துவீட்டைச் சேர்ந்த ஊனமுற்ற சராசரி இளைஞன் சிங்காரா சிங். அவனது இளம் மனைவி சுலோச்சனா என விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய கதாபாத்திரங்களுடன் தொடங்கும் கதை, பொதுவுடமை சித்தாந்தம் பேசும் […]

Read more

பாம்பின் கண்-தமிழ் சினிமா ஓர் அறிமுகம்

பாம்பின் கண்-தமிழ் சினிமா ஓர் அறிமுகம், சு. தியோடர் பாஸ்கரன், தமிழில்-லதானந்த், கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக். 280, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-701-5.html திரைப்படம் குறித்து எழுதப்பட்ட சிறந்த நூலுக்கான இந்திய அரசின் விருது பெற்ற ஆங்கில நூலின் தமிழாக்கமே இந்நூல். 1897ஆம் ஆண்டு சென்னையில் (அப்போது மதராஸ்) அரைவல் ஆஃப் தி டிரெயின், லீவிங் தி ஃபேக்டரி ஆகிய இரு குறும்படங்கள் திரையிடப்பட்டதில் தொடங்கி சாமிக்கண்ணு வின்சென்ட், ஆர்.வெங்கையா, ஆர்.நடராஜ முதலியார், பிரகாசா, […]

Read more

சிவாஜி வென்ற சினிமா ராஜ்யம்

சிவாஜி வென்ற சினிமா ராஜ்யம், கலைவித்தகர் ஆரூர் தாஸ், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 120ரூ. பாசமலர், புதிய பறவை, உள்பட சிவாஜி கணேசனின் 28 படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். சிவாஜியுடன் நெருங்கிப் பழகியவர். அவர் எழுதிய சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம் என்ற இந்தப் புத்தகத்தில், சிவாஜி பற்றிய பல அபூர்வமான தகவல்கள் நிறைந்துள்ளன. பல படங்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்ததால், புதிய பறவை படத்துக்கு வசனம் எழுத இயலாது என்று கூறிவிடுகிறார் ஆரூர் […]

Read more

பெண் ரகசியமற்ற ரகசியங்கள்

பெண் ரகசியமற்ற ரகசியங்கள், அருவி, 10, 6வது செக்டார், கே.கே. நகர், சென்னை 78, விலை 150ரூ. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகி வருகிற இந்தக் காலக்கட்டத்தில் பெண்களுக்கு இந்த சமூகத்தில் என்னவெல்லாம் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று கோடிட்டு காட்டி இருப்பதுடன் அந்தப் பிரச்சினைகள் வராமல் காக்கவும் வழிமுறைகள் கூறி இருப்பது சிறப்பு. பெண்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என அறிகிறபோது, பதற்றம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. பெண்கள், பெண் பிள்ளையை பெற்றவர்களின் பெண் பிள்ளைகள் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. நன்றி: […]

Read more

மறவர் சரித்திரம்

மறவர் சரித்திரம், வீ. ச. குழந்தை வேலுச்சாமி, முல்லை நிலையம், 9, பாரதிநகர், முதல்தெரு, தி.நகர், சென்னை 17, விலை 60ரூ. தமிழகத்தின் பழமை குடி மக்கள் என்று கூறப்படும் மறவர்கள் வாழ்ந்து வந்த பகுதிகள், நாயக்கர் அரசாட்சியில் தென்நாட்டு பகுதிகளில் மன்னவர்களாய் மறவர்கள் இருந்த பெருமைகள் உள்ளிட்ட மறவர்கள் பற்றிய பல தகவல்களை இந்நூல். நன்றி: தினத்தந்தி, 22/5/13   —-   மண்ணை அளந்தவர்கள், பழ. கோமதி நாயகம், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை […]

Read more

காரியக் காமராசர் காரணப் பெரியார்

காரியக் காமராசர் காரணப் பெரியார், மே.கா. கிட்டு, தோழமை வெளியீடு, 10, 6வது செக்டர், கே.கே. நகர், சென்னை 78, விலை 125ரூ. காமராசர், பெரியார் என்னும் இரு பெரும் தலைவர்கள் ஒரே இயக்கத்தில் வளர்ந்து வெவ்வேறு திசையில் அரசியலில் பயணித்தாலும், ஒருவர் மீது மற்றவர் கொண்ட மரியாதை அரசியல் நாகரிகத்தை இந்த நூல் பறை சாற்றுகிறது. காங்கிரஸ் கட்சியை வெறுத்துக் கொண்டே, காமராசர் என்ற அந்த பெருந்தலைவரை, அவரது ஆட்சியை பெரியார் ஆதரித்து வந்திருக்கிறார் என்பது வியப்பு அளிக்கிறது. மக்கள் தொண்டாற்றிய அந்த […]

Read more

முற்பிறவி மறுபிறவி ஆதாரங்கள்

முற்பிறவி மறுபிறவி ஆதாரங்கள், விக்கிரவாண்டி வி. ரவிச்சந்திரன், மேகதூதன் பதிப்பகம், 13, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 150ரூ. முற்பிறவியில் காதல் நிறைவேறாமல் இறந்து போனவர்கள், மறுபிறவியில் ஒன்று சேருவதாக சில திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். முற்பிறவி நினைவுகள் சிலருக்கு அபூர்வமாக வருவதுண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் பல்வேறு நாடுகளில் முன்ஜென்ம நினைவுகள் வரப்பெற்ற சிலருடைய வாழ்க்கையை இந்நூலில் கூறுகிறார். விக்கிரவாண்டி வி. ரவிச்சந்திரன். அந்த சம்பவங்கள் விறுவிறுப்பான துப்பறியும் கதைகளைப் படிக்கும் உணர்வை ஏற்படுத்துகின்றன. மறுபிறவியில் நம்பிக்கை இல்லாதவர்களும் ரசித்துப் […]

Read more

வரலாற்றில் மணிமங்கலம்

வரலாற்றில் மணி மங்கலம், அனந்தபுரம் கோ. கிருட்டின மூர்த்தி, திருக்குறள் பதிப்பகம், சென்னை 78, பக். 304, விலை 200ரூ. மகேந்திரவர்மனிடம் தோல்வி கண்ட இரண்டாம் புலிகேசி, நரசிம்மவர்மனை வெற்றிகாண காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள மணிமங்கலம் என்ற இடத்தில் போர் புரிந்து தோல்வியைத் தழுவுகிறான். இரண்டாம் புலிகேசியின் போர் முயற்சியால் பல்லவ நாடு பெரும் துன்பத்தைச் சந்தித்திருக்கிறது. இதனால் நரசிம்மவர்மன், இரண்டாம் புலிகேசியை அவன் நாட்டிலேயே அவனைத் தோற்கடிக்கிறான். அதனால் நரசிம்மவர்மன் காலத்தில் காஞ்சிரம் பல்லவருக்கு உரியதாக நிலைபெற்றது. இதனால் பல்லவ நாட்டின் முக்கிய […]

Read more

சங்கச் செவ்வியல்

சங்கச் செவ்வியல் (சங்க கிரேக்க ஒப்பீடு), முனைவர் செ. சாரதாம்பாள், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை 1, பக். 336, விலை 175ரூ. நீண்ட விரிவான மரபும் கட்டுக்கோப்பும் விரிவான முறைமைகளும் கொண்ட தன்மைதான் செவ்வியல். இதை ஆங்கிலத்தில் கிளாசிசம் என்பர். அத்தகைய செவ்வியல் பண்பைத் தமிழ் இலக்கியங்கள் பெற்றிருக்கின்றன. வாய்மொழி இலக்கியப் பண்புகளும் வரிவடிவ இலக்கியச் செம்மையும் ஒன்றமிடத்தில்தான் செவ்வியல் தோற்றம் பெறுகிறது என்பது நிதர்சன உண்மை. தமிழில் இலக்கியங்களில் உள்ள செவ்வியல் கூறுகளை பண்புகளை, கிரேக்க இலக்கியங்களுடன் ஒப்பிட்டு சில ஆய்வு […]

Read more

மரத்தின் அழைப்பு

மரத்தின் அழைப்பு, மலையாள சிறார் கதைகள், தமிழில்-யூமா வாசுகி, பாரதி புத்தகாலயம், 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 90ரூ. நகர்மயமாதலின் மௌனமான விளைவுகளில் ஒன்று குழந்தைப்பருவம் இழக்கும் உலகம். பெரும்பாலான முந்தைய தலைமுறை கிராமங்களில் வசித்தது. காடுகரைகள் எல்லாம் ஓடித்திரிந்து சிறுவர்கள் மாலைதான் வீட்டுக்கு வருவார்கள். சாப்பாட்டுக்குப் பையனைத் தேடி தாய்மார்கள் தெருக்களில் அலைவார்கள். கிளி பிடித்து, பொன்வண்டு தேடி, தேனடை தேடி, மீன்களைத் துழாவி அலைந்த அந்த சிறுவர்கள் எல்லாம் எங்கே போய்விட்டார்கள்? முந்தைய தலைமுறை அனுபவித்த கட்டற்ற […]

Read more
1 277 278 279 280 281 336