திருப்பதி ஒரு வாழ்க்கைக் கையேடு

திருப்பதி ஒரு வாழ்க்கைக் கையேடு, கோட்டா நீலிமா, மணிஜல் பப்ளிசிங் ஹவுஸ் (பி) லிட், 7/32, தரைத்தளம், அன்சாரி ரோடு, தர்யாகனிஜ், புதுடில்லி 110002, பக். 275, விலை 199ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-183-9.html கலியுக தெய்வமாகத் திகழும் திருப்பதி வேங்கடாசலபதி பெருமாள் குறித்த விவரங்கள் அனைத்தும், இந்நூலில் உள்ளன. அனைத்துப் பாவங்களையும் போக்குபவன் என்று நினைத்தே, மக்கள் வேங்கடாசலபதியை வணங்குகின்றனர். இதற்கு ஆதரவாக இந்நூல் பல செய்திகளையும் கூறுகிறது எனலாம். திருப்பதியின் தோற்றம், சுவாமி வேங்கடாசலபதியின் தத்துவம், […]

Read more

திருக்குறளில் உயிரினங்கள்

திருக்குறளில் உயிரினங்கள், புலவர் ஆர். நாராயணன், பூங்கொடி பதிப்பகம், பக். 104, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-432-4.html திருக்குறளைப் பலர் பல கோணங்களில் அலசி ஆராய்ந்திருக்கின்றனர். இந்நூலாசிரியர், திருக்குறளின் அதிகாரங்களிலிருந்து உயிரினங்களை வகைப்படுத்தி, அவற்றின் சிறப்பான இயல்புகளை திருக்குறளில் இயற்கை, திருக்குறளில் தாவரம், திருக்குறளில் விலங்குகள் என்னும் தலைப்புகளில் விளக்கியிருப்பது மிகவும் புதுமையானது. இந்நூலைப் படித்துவிட்டு, மீண்டும் திருக்குறளைப் படிக்கும் தமிழன்பர்கள் திருக்குறளில் புதியதொரு இலக்கிய இன்பத்தை அனுபவிப்பர் என்பது நிச்சயம். -மயிலை சிவா. நன்றி: தினமலர், […]

Read more

அடிமையின் காதல்

அடிமையின் காதல், ரா.கி. ரங்கராஜன், அல்லயன்ஸ் கம்பெனி, 244, ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை 4, பக். 456, விலை 205ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-4.html எழுத்துலகில் பன்முகம் கொண்ட ரா.கி.ரங்கராஜனின் இன்னொரு அவதாரம்தான் இந்த சரித்திர நாவல். வெள்ளைக்காரன் சென்னையில் குடியேறிய காலத்துப் பின்னணியில் எழுதப்பட்ட நாவல். இந்திய ஆங்கிலேயே உறவின் பதிவே ஒரு சரித்திரமாக விரிகிறது. சென்னை நகரில் நடந்த அடிமை வியாபாரம்தான் நாவலின் அடிநாதம். நம்முடைய சென்னை இப்படியும் இருந்ததா என கேட்க […]

Read more

பாரதி வசந்தனின் சங்கு புஷ்பங்கள்

பாரதி வசந்தனின் சங்கு புஷ்பங்கள், மெட்ராஸ் பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, விலை 135ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-6.html புதுவை தந்த சிறந்த எழுத்தாளரான பாரதி வசந்தனின் சிறுகதைத் தொகுதி சங்கு புஷ்பங்கள். இதில் 20 சிறுகதைகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒருவிதம். சமுதாய அவலங்கள், அரசியல் அநீதிகள், ஏழை பணக்காரன் வேறுபாடு இப்படி பல்வேறு பிரச்சினைகளையும் அலசி இருக்கிறார். தலைப்புக் கதையான சங்கு புஷ்பங்கள் உணர்ச்சிமயமானது. இளைய தலைமுறையினர் இக்கதைகளைப் […]

Read more

கிராமத்து ராட்டினம்

கிராமத்து ராட்டினம், ஜி. மீனாட்சி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, பக். 118. சமகாலப் பிரச்சினைகளின் கலை வடிவம் To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-1.html சிறுகதைகள் அருகிவரும் சூழலில் ஜி. மீனாட்சி பெயரைப் புதிதாக அறிய நேர்த்து. நல்ல தமிழில் எழுதியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. கதைச் கருக்கள் எளிமையானவை. மிக நுட்பமான விஷயங்களைப் பேச அவ்வளவாக சிரமமற்ற சம்பவங்களை அவர் தேர்ந்திருப்பது ஆச்சரியம் தருகிறது. மாறியிருக்கிற […]

Read more

வல்லமைச் சிறுகதைகள்

வல்லமைச் சிறுகதைகள், பல்வேறு எழுத்தாளர்கள், தாரிணி பதிப்பகம், சென்னை 20, பக். 104, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-207-7.html ஐக்யா டிரஸ்ட் நிறுவனமும் வல்லமை இணைய இதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் வென்ற 12 சிறுகதைகளின் தொகுப்பு. பழமை பேசியின் செவ்வந்தி, பார்வதி ராமச்சந்திரனின் நம்மில் ஒருவர், ஜெயஸ்ரீ சங்கரனின் நாலடிக் கோபுரங்கள் ஆகிய கதைகள் நல்ல கதைகள் என்றபோதிலும் வாசகன் பழகிய தடத்திலேயே நடைபோடுகின்றன. சுதாகரின் காட்சிப் பிழை வேறுபட்டதோர் மனநிலையை நுட்பமாகச் சொல்கிறது. […]

Read more

பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்

பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ், முனைவர் ச.க. இளங்கோ, பாரி நிலையம், 88/184, பிராட்வே, சென்னை 108, பக். 488, விலை 180ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-595-2.html ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி மற்றும் வளையாபதி, திரைக்கதை வசனம், பாடல்கள் அடங்கிய ஆய்வுப் பதிப்பு இது. ஆயிரம் தலை வாங்கியில் ஒரு காட்சி, பெண்கள் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் இடம். நீதிகேது-இன்னும் படிக்க வைக்க வேண்டும். மங்கை-கணவனுக்குக் கல்வி வேண்டும். மனைவிக்கு என்ன வேண்டும்? கணவன் மேல் அன்பு. நீதி-பெண்களுக்கு […]

Read more

சூரிய உதடுகள்

சூரிய உதடுகள், சுசி. நடராஜன், சாரதி பதிப்பகம், 107/6, ரிச்சித் தெரு, சித்தாதிரிப் பேட்டை, சென்னை2, பக். 96, விலை 45ரூ. கவிதையின் ஆழம் கவிஞன் எடுத்தாளும் வார்த்தைகளில்தான் உள்ளது. மனிதம், இயற்கை, சமூகம், காதல், போட்டி, பொறாமை, சுதந்திரம் எதுவாக இருந்தாலும் சுசி. நடராஜனின் வார்த்தைகளில் ஓர் உயிர்ப்பு பெற்றுவிடுகிறது. இரட்டை மாடு வாழ்க்கை வண்டி பூட்டிய பிறகு பாரம் சுமக்க பயப்படும் மிரட்சி வாழ்க்கைப் பயணத்தில் எழும் மிரட்சியை ஆசிரியர் தொட்டுச் செல்லும் பாங்கில் ஒரு பெருமூச்சு எழுகிறது. வாழ்க்கையின் எச்சரிக்கை […]

Read more

அவளது பாதை

அவளது பாதை, சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 110ரூ. பெண்களின் அவலநிலையை கூறும் நூல். தெலுங்கு இலக்கிய உலகில் புகழ் பெற்ற பெண் எழுத்தாளர் அப்பூரி சாயாதேவி தெலுங்கில் எழுதிய இந்த நூலை ஆசிரியர் கொ.மா.கோதண்டம் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இதில் 28 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒரு பெண் சமுதாயத்தால் எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்படுகிறாள். ஒதுக்கி வைக்கப்படுகிறாள் என்பதை உணர்ச்சி பொங்க எழுதியுள்ளார். இக்கதைகளை படிக்கும்போது பெண்களுக்கு இவ்வளவு பிரச்சினைகளா? என்று வியக்க வைக்கிறது. இதில் […]

Read more

வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு

வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு, ரேமண்ட் கார்வர், தமிழில் செங்கதிர், எம். கோபாலகிருஷ்ணன், க. மோகனரங்கன், விஜயராகவன் வெளியீடு, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, விலை 200ரூ. இருபதாம் நூற்றாண்டின் சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவராக கருதப்படும் அமெரிக்க எழுத்தாளரான ரேமண்ட் கார்வர் யதார்த்தவாத சிறுகதை மரபை மீட்டவர். அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட 12 சிறுகதைகளின் தமிழ்மொழி பெயர்ப்பே வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு என்ற இச்சிறுகதைத் தொகுப்பு. யதார்த்தவாதம் என்பது இன்னும் வீரியமான கதை சொல்லல் விதமாகவே உள்ளது என்பதை […]

Read more
1 60 61 62 63 64 80