பள்ளு இலக்கியத் திரட்டு

பள்ளு இலக்கியத் திரட்டு, தே. ஞானசேகரன், சாகித்திய அகடமி, ரவீந்திர பவன், 35, பெரோஸ்ஷா சாலை, புதுடில்லி 110001, பக். 192, விலை 110ரூ. பிள்ளைக்கவி முதல் பெருங்காப்பியம் ஈறாகக் கூறப்படும் 96 பிரபந்தங்களுள் ஒன்ற பள்ளு இலக்கியம். நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது எனும் அளவுக்கு, உழவர்களின் பாடல்கள் ஏராளமாக உள்ளன. இந்நூலில் கடவுள் வணக்கம் மூத்த பள்ளிவரல் இப்படியாக பள்ளிகளுள் ஒருவருக்கொருவர் ஏசல் என 48 உறுப்புகள் 14 வகைகளுக்குள் அமைக்கப்பட்டுள்ளது. 19 பள்ளு நூல்களில் இருந்து […]

Read more

தமிழ் மக்கள் வரலாறு நாயக்கர் காலம்

தமிழ் மக்கள் வரலாறு நாயக்கர் காலம், க.ப. அறவாணன், தமிழர் கோட்டம், பக். 304, விலை 200ரூ. விஜய நகர அரசர் அரிகரபுக்கரின் மகனான, கம்பள நாயக்கர் மதுரையை அப்போது ஆண்டு கொண்டிருந்த இஸ்லாமியர்களை வீழ்த்தி விட்டு அரியணை ஏறினார். கி.பி. 15, 16ம் நூற்றாண்டில் மதுரையைப் பிடித்த நாயக்கர் தஞ்சாவூர், செஞ்சி, வேலூர் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, தன் பேரரசை நிறுவினார். நாயக்கர்கள் ஏறத்தாழ 200 ஆண்டுகள் மிகக் சிறப்பாக ஆட்சி புரிந்திருக்கின்றனர். அக்காலத்தில், சமஸ்கிருதமும், தெலுங்கும் தமிழகத்தில் ஆட்சி பீடத்தில் இருந்திருக்கின்றன. […]

Read more

காலத்தை வென்ற சித்தர்கள்

காலத்தை வென்ற சித்தர்கள், குருப்பிரியா, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 17, விலை 50ரூ. அபூர்வமான சக்தி படைத்த சித்தர்கள், காலத்தை வென்று வாழ்ந்தவர்கள். அவர்களுடைய சக்திகள் பற்றியும், சிறப்புகள் பற்றியும் கூறுகிறது இந்நூல்.   —-   பண்ணைத் தொழில்கள், முனைவர் ஓஹென்றி பிரான்சிஸ், வாடிவாசல் பதிப்பகம், 100, லாட்டிஸ் பிரிட்ஜ் சாலை, அடையாறு, சென்னை 20, விலை 120ரூ. பால்பண்ணைத் தொழில்கள் பற்றிய அனைத்து விவரங்களும் கொண்ட நூல். இந்தத் தொழில்களைத் தொடங்க அரசு மானியம் […]

Read more

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், பாலசர்மா, டி.எஸ்.புத்தக மாளிகை, 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 100ரூ. ராஜாஜி என்ற அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் வாழ்க்கை வரலாறு. வாழ்க்கையில் தூய்மையும், நேர்மையும் முக்கியமானவை என்று கருதி, அதன்படியே நடந்தவர் ராஜாஜி. சொந்த வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் அப்பழுக்கின்றி வாழ்ந்து, வரலாற்றில் நிலைபெற்றவர். அவரது குணநலன்கள், சாதனைகள், அறிவுரைகள் என்று திரட்டித் தரப்பட்டுள்ளது. இந்நூலைப் படிக்கும்போது எப்பேர்ப்பட்ட தலைவர்களை நாம் பெற்றிருந்திருக்கிறோம் என்று பெருமை ஏற்படுவது உண்மை.   —-   […]

Read more

தாய்மை

தாய்மை, டாக்டர் ஜெயம் கண்ணன், கர்ப்ப ரக்ஷாம்பிகை மகப்பேறு மையம், யுனைடெட் இந்தியா காலனி, 4, ஆறாவது குறுக்குத்தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 300ரூ. தாய்மை என்ற அற்புதமான அனுபவத்தை அடைந்த கணத்தில்தான் ஒரு பெண் முழுமை அடைகிறாள். அதனால்தான் தாய்மை அனுபவத்திற்கு நிகராகச் சொல்வதற்கு இந்த உலகின் வேறு எதுவுமே இல்லை என சொல்லப்படுகிறது. கருமுட்டை தயாராகும் முதல் வாரம் தொடங்கி 40 வாரங்களில் ஒரு சிசு படிப்படியாக அடையும் மாற்றங்களையும் நிகழ்வுகளையும் குழந்தைக்கு எப்போது இதயம் துடிக்கத் தொடங்குகிறது? எப்போது […]

Read more

பூர்வீக பூமி

பூர்வீக பூமி, சூர்யகாந்தன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை 14, பக். 154, விலை 80ரூ. வானம் பார்த்த பூமியில் குடியானவர்களுக்கும், ஆடுமாடுகளும் படும்பாட்டை மானாவாரி மனிதர்கள் என்ற படைப்பாக தந்தவரின் அடுத்த அனுபவம்தான் பூர்வீகபூமி. உழைக்க சளைக்காத சிறுசிறு விவசாயிகள், தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் தங்கள் விவசாயத்தையும் தொழிலையும் விட்டுவிட்டு, அண்டை மாநிலமான கர்நாடகாவில் வீணாய்ப்போகும் நிலங்களை விளைநிலமாக மாற்றும் பொருட்டு அங்கே குடிபோகிறார்கள். பாடுபட்டவர்கள் பலனை அனுபவிக்கும் முன்பே காவிரிப் பிரச்னை பூதாகரமாகி, தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் […]

Read more

கம்ப இராமாயணம்-ஓர் அறிமுகம்

கம்ப இராமாயணம்-ஓர் அறிமுகம், பேராசிரியர்-அ.ச. ஞானசம்பந்தன், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை 40, பக். 352, விலை 150ரூ. கம்ப ராமாயணத்தை புதிய பார்வையில் ஆய்வு நோக்கில் அலசி ஆராய்ந்தவர் அ.ச. ஞானசம்பந்தன். கோவை கம்பன் அறநிலை வெளியிட்ட கம்பராமாயண நூல்களுக்கு ஆறு காண்டங்களுக்கும், அ.ச. ஞானசம்பந்தன் எழுதிய முன்னுரைகளை தனி நூலாக்கி, கம்பராமாயணத்தை முழுமையாக அறிந்து கொள்ள உதவியிருக்கிறார்கள். பாலகாண்டம் தொடங்கி யுத்த காண்டம் முடிய இன்னும் ஆராய வேண்டிய பகுதிகளைப் பற்றி ஆசிரியர் எடுத்துச் […]

Read more

நாம் பிரிந்துவிட வேண்டாம்

நாம் பிரிந்துவிட வேண்டாம், டாக்டர் யூசுப் அல்கர்ளாவி, தமிழில்-பேராசிரியர் கே.எம். இல்யாஜ் ரியாஜி, வேர்கள் பதிப்பகம், 52/1, மண்ணடி தெரு, சென்னை 600001, பக். 292, விலை 175ரூ. ஒற்றுமை என்ற கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று வெற்றிக்கு வழி கூறும் மார்க்கம், இஸ்லாம். அது இன்று சில கருத்து வேறுபாடுகளால் பல பிரிவுகளாகப் பிரிந்து நின்று செயல்படுகிறது என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தும் இந்நூலாசிரியர், இம்மார்க்கத்தின் மீது உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள், பிரிவினையை உருவாக்கும் கருத்து மோதல்களைக் கைவிட்டு ஒருங்கிணைந்து செயல்பட […]

Read more

தூக்கிலிடுபவரின் குறிப்புகள்

தூக்கிலிடுபவரின் குறிப்புகள், சசி வாரியார், தமிழில்-இரா. முருகவேள், உன்னதம், ஆலந்தூர் அஞ்சல், கவுந்தப்பாடி 638366, ஈரோடு மாவட்டம், விலை 140ரூ. இந்தியாவில் வேறெப்போதையும் விட தூக்குதண்டனைக்கு ஆதரவான குரல்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. மக்கள் கொடூரமான குற்றங்களை எதிர்கொள்ளும் ஒவ்வொரு சமயத்திலும் மரண தண்டனைதான் ஒரே தீர்வு என்று கூக்குரலிடுவதைக் கேட்கிறோம். ஆனால் அவர்கள் மரணதண்டனை என்றால் என்னவென்று புரிந்துகொண்டிருக்கிறார்களா என்பது சந்தேகம். திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் 117 பேரை தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றும் தொழிலாளியாகப் பணிபுரிந்த ஜனார்த்தனன் பிள்ளையின் வாக்குமூலத்தை சசி வாரியர் […]

Read more

இசைத் தமிழும் நாடகத் தமிழும் தோற்றமும் வளர்ச்சியும்

இசைத் தமிழும் நாடகத் தமிழும் தோற்றமும் வளர்ச்சியும், மா.ந. திருஞானசம்பந்தன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 270, விலை 120ரூ. தமிழர்களின் ஐவகை நிலங்களுக்குரிய தெய்வம், உணவு, பறவை, மலர், பண், தொழில் போன்றவற்றை விரிவாகப் பட்டியலிடுவதில் தொடங்கி சங்க காலத்தில் இசைத்தமிழ், சோழர்கள் காலத்தில் தமிழிசை, தமிழிசை வளர பாடுபட்டவர்கள், கூத்துக்கலையின் வகைகள், நாடகக்கலையை வளர்த்தவர்கள், நாடகத்தால் வளர்ந்தவர்கள், நாடக சபாக்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் ஏராளமான தகவல்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. ஆப்ரகாம் பண்டிதர், அண்ணாமலை செட்டியார், பாரதியார், பாரதிதாசன், கண்மணி […]

Read more
1 773 774 775 776 777 841