சங்கச் செவ்வியல்

சங்கச் செவ்வியல் (சங்க கிரேக்க ஒப்பீடு), முனைவர் செ. சாரதாம்பாள், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை 1, பக். 336, விலை 175ரூ. நீண்ட விரிவான மரபும் கட்டுக்கோப்பும் விரிவான முறைமைகளும் கொண்ட தன்மைதான் செவ்வியல். இதை ஆங்கிலத்தில் கிளாசிசம் என்பர். அத்தகைய செவ்வியல் பண்பைத் தமிழ் இலக்கியங்கள் பெற்றிருக்கின்றன. வாய்மொழி இலக்கியப் பண்புகளும் வரிவடிவ இலக்கியச் செம்மையும் ஒன்றமிடத்தில்தான் செவ்வியல் தோற்றம் பெறுகிறது என்பது நிதர்சன உண்மை. தமிழில் இலக்கியங்களில் உள்ள செவ்வியல் கூறுகளை பண்புகளை, கிரேக்க இலக்கியங்களுடன் ஒப்பிட்டு சில ஆய்வு […]

Read more

ஆழ்மனதின் அற்புத சக்திகள்

ஆழ்மனதின் அற்புத சக்திகள், என். கணேசன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-009-2.html ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மகத்தான ஆழ்மனசக்தி உண்டு. முறையான பயிற்சிகளின் மூலம் அத்தகைய சக்தி கைவரப்பெற்று பல அற்புதங்களை நிகழ்த்தியவர்களைச் சித்தர்கள், மகான்கள் என்று அழைக்கிறோம். வெளிநாடுகளிலும் இத்தகையவர்கள் உண்டு. இவர்கள் புரியும் அற்புதங்கள் சில சமயம் அறிவுக்குப் பொருத்தமாகத் தோன்றாது. ஆனால் அவை உண்மை. அறிவியலில் எல்லா வினாக்களுக்கும் விடையில்லை என்றார் […]

Read more

ஆய்வுச் சுடர்கள்

ஆய்வுச் சுடர்கள், முனைவர் ந. வெங்கடேசன், அய்யா நிலையம், பக். 112, விலை 70ரூ. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு, முந்தைய இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை, எதையும் விடாமல் அத்தனையையும், திறனாய்வு நோக்கில் இந்த நூல் அணுகுகிறது. பள்ளு என்னும் சிற்றிலக்கியம் காட்டும் மருத நில வளத்தையும், சைவத் திருமுறைகள் காட்டும் வாழ்வியல் செய்திகளையும், அழகாக ஆய்வுக்குட்படுத்தியுள்ளார் ஆசிரியர். மு.வ. எனச் சுருக்கமாக அழைக்கப்பெறும், மு. வரதராசனாரின் உரைநடைத் திறனை வெளிப்படுத்தியிருக்கும் விதம் பாராட்டிற்குரியது. தமிழ் இலக்கிய அறிமுகத்தையும், ஆய்வையும் நோக்கில் படையெடுக்கப்பட்டுள்ள இந்த […]

Read more

பண்டிகைக்கால சைவ சிற்றுண்டி வகைகள்

பண்டிகைக்கால சைவ சிற்றுண்டி வகைகள், மீனா சங்கரன், லியோ புக் பப்ளிஷர்ஸ், விலை 100ரூ. இந்திய பண்டிகைகள் பல்வேறு நலமிக்க உணவுகளை கொண்டதாக அமைக்கப்பட்டிருககிறது. காலம்காலமாக போற்றப்படும், இந்த பண்டிகை உணவுகள் தயாரிப்பை, இந்த நூலில் காணலாம். சுய்யன், கர்ச்சிக்காய், வெல்ல அடை, ஆல் இன் ஒன் மிக்சர் என்ற பல தயாரிப்புகளை, சமையலறையில் சவையுடன் தயாரிக்க, இந்த நூல் பெரிதும் உதவிடும்.   —-   பெருமைமிகு சௌராஷ்டிர சமூகம் – ஓர் அறிமுகம், கே. ஆர். சேதுராமன், மல்லிகை புக் சென்டர், […]

Read more

வள்ளுவரின் வித்தியாசமான பார்வைகள்

வள்ளுவரின் வித்தியாசமான பார்வைகள் (ஆசிரியர்:தி.கலியராஜன்; வெளியிட்டோர்: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை – 17, விலை ரூ.100) திருவள்ளுவர் உலகிற்கு தந்த உன்னத திருக்குறளின் சில குறள்களை வித்தியாசமான கண்ணோட்டத்தில் விமர்சிப்பது படிக்க சுவாரசியமாக இருக்கிறது. ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஒரு சிறுகதை அல்லது தற்போதைய அரசியலுடன் தொடர்புபடுத்தி விளக்கி இருப்பது தனிச்சிறப்பு. நன்றி: தினத்தந்தி (6.3.2013).   —–   மன அழுத்தம் ஏற்படாமல் அமைதியாக வாழ்வது எப்படி? (ஆசிரியர்: ஏ.கே.சேஷய்யா; வெளியீடு: உஷா புத்தக நிலையம், 1, நரசிம்மன் […]

Read more

தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம்

தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம், பெ. நிர்மலா, அலைகள் வெளியீட்டகம், சென்னை 24, பக். 408, விலை 280ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-8.html தமிழர்களையும் சிற்பக்கலைகளையும் தனித்தனியே பிரித்துப் பார்ப்பதென்பது இயலாத காரியம். சொற்களில் இலக்கிய வண்ணத்தையும், கற்களில் கலை வண்ணத்தையும் கண்டவர்கள் தமிழர்கள். கோவில் கட்டிட அமைப்பு, சிற்பங்கள் போன்றவற்றை பக்தி, அழகியல் உணர்வு, கலை போன்ற கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்கும் பார்வை உள்ளது. இவற்றையும் மீறி அவற்றில் சமூகத்தின் உளவியல் ரீதியான பால், பாலியல் வேறுபாடுகள் […]

Read more

தெய்வம் நீயென்றுணர்

தெய்வம் நீயென்றுணர், கணபதி ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 134, விலை 75ரூ. மகாகவி பாரதியின் ஆத்திசூடியிலிருந்து பெறப்பட்ட தலைப்பு. ஆசிரியர் கணபதி ராமகிருஷ்ணன், அறிவியல் அறிஞர் போலும். கடவுள் துகள் என்ற சமீபத்திய ஒரு கோட்பாட்டை, நமது ஆன்மிகத்துடன் இணைத்து வைத்துப் பார்க்கிறார் ஆசிரியர். பெரிய வெடிப்பிற்கு பிறகு, பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகே எலக்ட்ரான், புரோட்டான் போன்றவை உருவாயின. அதன் பிறகே, மிகச் சிறிய அளவே உயிர் அமீபாவா வந்தது என்று ஆரம்பிக்கும், இவரது பிரபஞ்ச தோற்ற வளர்ச்சிக்கு […]

Read more

அருள்மிகு கருப்பசாமி ஒரு நடமாடும் தெய்வம்

அருள்மிகு கருப்பசாமி ஒரு நடமாடும் தெய்வம், தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா, ஓங்காரம், சென்னை 80, பக். 1864, விலை 1500ரூ. To buy this Tamil book – www.nhm.in/shop/100-00-0001-014-6.html காவல் தெய்வமான கருப்பசாமியைப் பற்றி புராணங்களில் கூறப்பட்டிருப்பதில் தொடங்கி, அவருடைய வேறு பெயர்கள், பூஜை முறைகள், வணங்க வேண்டிய நாள்கள், தமிழகத்தில் இருக்கும் அனைத்து கருப்பசாமி கோயில்கள் பற்றிய தகவல்கள் (அமைவிடம், கோயில் அமைப்பு, வழிபாடு விவரம்) இப்படி கருப்பசாமி குறித்த அனைத்துச் செய்திகளும் அடங்கிய அருமையான தொகுப்பு இது. ஏராளமான படங்களும் […]

Read more

உகரச்சுட்டு

உகரச்சுட்டு, முகிலை இராசபாண்டியன், கோவன் பதிப்பகம், பாலாஜி நகர், புழுதிவாக்கம், சென்னை 91, பக். 112,விலை 80ரூ. தமிழ்மொழியில் அ, இ, உ என மூன்ற சுட்டெழுத்துக்கள் உள்ளன, இந்தியாவில் உள்ள பிற மொழிகளில் அ, இ என்னும் இரண்டு சுட்டெழுத்துக்களே உள்ளன. அ என்னும் சுட்டெழுத்து அவன் அவ்வீடு எனத் தொலைவில் உள்ள பொருளையும் இ என்னும் சுட்டெழுத்து இவன் இவ்வீடு என அருகில் உள்ள பொருளையும் குறிக்கும். உ என்னும் சுட்டெழுத்து தற்காலத்தில் பேசப்படுவதில்லை. உ என்னும் சுட்டெழுத்து தொலைவுக்கும் அருகுக்கும் […]

Read more

மருதநாயகம் கான்சாகிப்

மருதநாயகம் கான்சாகிப், செ. திவான், விகடன் பிரசுரம், அண்ணா சாலை, சென்னை 2, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-009-0.html மருதநாயகம் என்ற மாவீரனின் சாகசங்களையும், அதிரடியான போர்த்திறன்களையும் விறுவிறுப்பான நடையில் பதிவு செய்திருக்கிறார் புத்தக ஆசிரியர் செ. திவான். ஆரம்ப காலத்தில் ஆங்கிலேயருடன் நட்பு பாராட்டினாலும் பின்னர் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்ககியவர் மருதநாயகம் எனும் கான்சாகிப். கமல்ஹாசன் மிக பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்ட கதை இது. மருதநாயகம் வரலாற்றை மிக நுட்பமாக ஆராய்ந்து பல உண்மைகளை […]

Read more
1 76 77 78 79 80 84